கொவிட்-19 அபாயத்திலும் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

கொவிட்-19 அபாயத்திலும் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

1 mins read

இந்­தி­யா­வில் கொவிட்-19 பாதிப்பு அதி­க­ரித்­துள்­ள­போ­தி­லும் அந்­நாட்­டின் வட­மா­நி­லங்­களில் மகர

சங்­க­ராந்­தி­யை­யொட்டி ஆறு­கள் உள்­ளிட்ட நீர்­நி­லை­களில் ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் புனித நீராடி வழி­பட்­ட­னர்.

கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் நோக்­கில் ஒரு சில இடங்­களில் நீரா­டு­வ­தற்­குத் தடை விதிக்­கப்­பட்­டது. மேற்கு வங்­கத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் கங்கை நதி­யில் புனித நீரா­டி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

உத்­த­ரப் பிர­தே­சத்­தில் உள்ள பிர­யக்­ரா­ஜில் உள்ள திரி­வேணி சங்­க­மத்­தில் பக்­தர்­கள் புனித நீராடி வழி­பட்­ட­னர்.

முகக்­க­வ­சம் அணி­யாத

பக்­தர்­கள் பலர்­ நதியை நோக்கி கூட்­டங்­கூட்­ட­மா­கச் சென்­ற­தாக இந்­திய ஊட­கம் தெரி­வித்­தது.

நேற்­றைய நில­வ­ரப்­படி இந்­தி­யா­வில் மேலும் 264,202 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு கூறி­யது. கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மேலும் 315 பேர் மாண்டனர்.