100,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி

100,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி

2 mins read

சிங்­கப்­பூ­ரில் நேற்­றுக் காலை நில­வரப்படி ஐந்து முதல் 11 வயது வரை­யி­லான 100,000க்கும் மேற்­பட்ட குழந்­தை­க­ளுக்கு முத­லா­வது தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

இந்த விவ­ரத்தை வெளி­யிட்ட கல்வி அமைச்சு, கல்வி அமைச்­சின் தொடக்­கப் பள்­ளி­களில் பயி­லும் தொடக்­க­நிலை 1 முதல் ஆறு வரை­யி­லான மாண­வர்­களில் ஐந்­தில் இருவர் தடுப்­பூசி போட்­டுள்­ள­னர் என்­று தெரி­வித்­தது.

உடன்­பி­றந்­த­வர்­க­ளு­டன் சேர்ந்து வந்து ஒன்­றாகத் தடுப்­பூசி போட்டுக்கொள்­ளும் ஏற்­பாடு நல்ல பல­ன­ளித்­துள்­ள­தா­க­வும் அமைச்சு குறிப்­பிட்­டது.

இந்த ஏற்­பாட்­டின் மூலம் குழந்தை­க­ளுக்­குத் தடுப்­பூசி போட ஆரம்­பித்த முதல் வாரத்­தி­லேயே திங்­கள் முதல் வியா­ழன் வரை­2,800க்கும் மேற்­பட்ட குழந்­தை­கள் தடுப்­பூசி போட்­டுள்ளனர்.

இம்­மா­தம் 3ஆம் தேதி ஐந்து முதல் 11 வயது குழந்­தை­களுக்கு உடன்­பி­றந்­த­வர்­க­ளு­டன் சேர்ந்து தடுப்­பூசி போட்­டுக்கொள்­ளும் ஏற்­பாடு பற்றி அறி­விக்­கப்­பட்­டது.

இதன்­படி சரா­ச­ரி­யாக ஒவ்­வொரு ஐந்து குழந்­தை­க­ளுக்­கும் அவர்களின் உடன்­பி­றந்த ஒரு குழந்தை தடுப்­பூசி போட்­டுக்கொண்­டதை காண முடிந்­தது என்று கல்வி அமைச்சு மேலும் தெரி­வித்­தது.

குழந்­தை­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் அடுத்த கட்­டம் வரும் திங்­கள்கிழ­மை­யி­லி­ருந்து தொடங்­கும். அப்­போது படிப்­ப­டி­யாக அவர்­க­ளுக்கு இரண்­டா­வது தடுப்­பூ­சி­ போடப்­படும்.

இது தவிர, சிறப்­புத் தேவை­­உடை­ய­வர்­களை கவ­னிப்­ப­தில் அனு­ப­வ­முள்ள சுகா­தார மேம்­பாட்­டுக் கழ­கத்­தின் ஊழி­யர்­க­ளைக் கொண்டு நடத்தப்படும் நட­மா­டும் தடுப்பூசி குழுக்­கள் புதன்­கி­ழ­மை­யி­லி­ருந்து படிப்­ப­டி­யாக 20ல் 12 சிறப்­புக் கல்வி நிலை­யங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நாள் வரை சிறப்­புத் தேவை­யு­டைய மாண­வர்­கள் மூவ­ரில் இரு­வர் தடுப்­பூ­சிக்கு பதிந்­து­கொண்டு உள்­ள­னர் என்­று அமைச்சு கூறியது.

"தடுப்­பூசி போடு­வ­தால் குழந்­தை­க­ளுக்கு மட்­டு­மல்ல, அவர்­களை சுற்­றி­யுள்ள மருத்­துவ கார­ணங்­க­ளுக்­காக தடுப்­பூசி போடா­த­வர்­ களை­யும் பாது­காக்­கிறது.

"பெற்­றோர் மற்­றும் காப்­பா­ளர்­கள் தங்­க­ளு­டைய பிள்­ளை­க­ளுக்கு தடுப்­பூசி போட்­டுக்கொள்­ளும் தகுதி இருந்­தால் உட­ன­டி­யாக தடுப்­பூசி போட்டுக்கொள்வதை ஊக்கு­ விக்­கி­றோம்.

"பண்­டிகை காலம் வரு­வ­தால் அதிக சமூக ஒன்­று­கூ­டல்­களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் எதிர்­பார்க்­கப்­படும் ஓமிக்­ரான் அலைக்கு இயன்றவரை நாம் பாது­காப்­பாக இருப்பது அவசியம்," என்று கல்வி அமைச்சு வலியுறுத்தி உள்ளது.