கொவிட்-19 தொற்று: ஒருங்கிணைந்த காப்புறுதி 2022 இறுதிவரை நீட்டிப்பு

கொவிட்-19 தொற்று: ஒருங்கிணைந்த காப்புறுதி 2022 இறுதிவரை நீட்டிப்பு

1 mins read

கொவிட்-19 தொற்­றால் உடல்­ந­லம் குன்றி மருத்­து­வ­ம­னை­யில் அனு­மதிக்­கப்­ப­டு­வோ­ருக்கு ஒருங்­கிணைந்­த காப்­பு­று­தித் திட்­டத்­தின்­கீழ் வழங்­கப்­படும் பாது­காப்பு இவ்­வாண்டு டிசம்­பர் 31ஆம் தேதி­வ­ரைக்­கும் நீட்­டிக்­கப்­பட உள்ளது.

ஒருங்­கி­ணைந்த காப்­பு­றுதி பெற்று, தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தின்­கீழ் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட அனை­வருக்­கும் இது பொருந்­தும் என்று சிங்­கப்­பூர் ஆயுள் காப்­பு­று­திச் சங்­கம் நேற்று தெரி­வித்­தது.

உலக சுகா­தார நிறு­வ­னம் அவ­ச­ர­கா­லப் பயன்­பாட்­டிற்கு அங்கீ­க­ரித்­துள்ள தடுப்­பூ­சி­களை, சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தின் சிறப்பு நடை­மு­றை­யின்­கீழ் சிங்­கப்­பூ­ரில் போட்­டுக்­கொண்­டோ­ருக்­கும் இது பொருந்­தும்.

இதன் தொடர்­பில் ஏதேனும் ஐயம் இருந்­தால் ஒருங்­கிணைந்த காப்­பு­றுதி பெற்­றிருப்போர் தங்­களது காப்­பு­றுதி முக­வர்களை அல்­லது ஒருங்­கி­ணைந்த காப்­புறுதி நிறு­வனங்­களைத் தொடர்பு­கொள்­ள­லாம் என்று சங்­கம் தெரி­வித்­தது.

முன்னதாக, இங்­குள்ள ஏழு ஒருங்­கிணைந்த காப்­பு­றுதி நிறு­வனங்­களும் தொடக்­கத்­தில் வழங்­கிய 12 மாத சிறப்­புப் பாது­காப்பு கடந்த டிசம்­பர் 31ஆம் தேதி­யுடன் முடி­வ­டைந்­தது.