கட்டுப்பாடுகளுடன் தைப்பூசத் திருவிழா

கட்டுப்பாடுகளுடன் தைப்பூசத் திருவிழா

1 mins read
9e2fb629-a189-4eeb-bc14-e1c19660b716
கியோங் செய்க் ரோடு அருள்மிகு லயன் சித்தி விநாயகர் கோவிலுக்கு நேற்று வெள்ளி ரதத்தில் வந்து, தம் அண்ணன் விநாயகப் பெருமானிடம் இருந்து புனித வேலைப் பெற்றுச் சென்றார் முருகப்பெருமான். படம்: த. கவி -

கொவிட்-19 பர­வல் கார­ண­மாக சென்ற ஆண்­டைப் போலவே இந்த­முறை­யும் சிங்­கப்­பூ­ரில் தைப்­பூ­சத் திரு­விழா கட்­டுப்­பா­டு­க­ளு­டன் கொண்­டா­டப்­ப­டு­கிறது.

காவடி எடுக்க அனு­ம­தி­யில்­லாத நிலை­யில், தேங் ரோடு அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோவி­லில் பக்­தர்­கள் பால்­கு­டம் எடுக்கும் நிகழ்வு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தொடங்கியது. மொத்­தம் 7,000 பேர் பால்­கு­டம் எடுப்பதற்குப் பதி­வு­செய்­து உள்­ளனர்.

பால்­கு­டம் எடுப்­போ­ருக்­கும் மற்ற பக்­தர்­க­ளுக்­கும் எனத் தனித்­த­னி­யாக வழி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இன்­றி­ரவு 10 மணி­வரை பக்­தர்­கள் பால்­கு­டம் எடுக்­க­லாம். அதி­க­பட்­சம் ஐவர் கொண்ட குழுக்­க­ளாக பக்­தர்­கள் கோவி­லுக்கு வர­லாம்.

சிங்­கப்­பூ­ரி­லுள்ள மற்ற முரு­கன் கோவில்­க­ளி­லும் தைப்­பூ­சத்தை முன்­னிட்டு பால்­கு­டம் உள்­ளிட்ட சிறப்பு நிகழ்­வு­க­ளுக்கு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

புக்­கிட் பாஞ்­சாங் ஸ்ரீ முரு­கன் திருக்­குன்­றத்­தில் அதி­காலை 4 மணி முதல் பிற்­ப­கல் 1 மணி வரை­யி­லும் பின்­னர் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை­யி­லும் பால்­குடம் எடுக்­க­லாம்.

ஈசூன் புனி­த­ம­ரம் ஸ்ரீ பால­சுப்­பி­ர­மணி­யர் கோவி­லில் விடி­காலை 4 மணி­யில் இருந்து நண்­ப­கல் 12 மணி­வரை பக்­தர்­கள் பால்­கு­டம் எடுப்­பர்.

செங்­காங் அருள்­மிகு வேல்­மு­ருகன் ஞான­மு­னீஸ்­வ­ரர் ஆல­யத்­தில் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை­யி­லும் மாலை 5.30 மணி­யில் இருந்து 8.30 மணி வரை­யி­லும் பால்­கு­டம் எடுத்­தல் நடை­பெ­றும்.

கூடுதல் செய்தி: ஆ. விஷ்ணு வர்தினி