'கொவிட்-19 தடுப்பூசிகளால் 5-11 வயது பிள்ளைகளுக்கு கடும் பக்கவிளைவுகள் பதிவாகவில்லை'

2 mins read
4b05186a-e15f-43d7-a3bf-8de8fcd4ae37
2021 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, கொவிட்-19 தொடர்பான கடுமையான பக்கவிளைவுகள் ஏதும், 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களிடையே பதிவுசெய்யப்படவில்லை என்று  சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது. -

ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறுவர்களிடையே, 2021 டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான கடுமையான பக்கவிளைவுகள் ஏதும் பதிவாகவில்லை.

தடுப்பூசிகளின் பாதுகாப்பு பற்றி மேல்விவரம் அளித்த சுகாதார அறிவியல் ஆணையம் புதன்கிழமை (ஜனவரி 19) அன்று இதைத் தெரிவித்தது.

ஐந்திலிருந்து 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு சாதாரணப் பக்கவிளைவுகள் பதிவானதாக ஆணையம் கூறியது.

தோல் வீக்கம், தலைசுற்றல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்றவை அவற்றில் அடங்கும்.

12 வயது முதல் 18 வயது வரையிலான இளையர்களிடையே, தோலில் பொறிப் பொறியாக வருவது, தோல் வீக்கம், கண் இமைகள், முகம் ஆகியவற்றில் வீக்கம் போன்ற தோல் ஒவ்வாமை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மூச்சுத் திணறல், நெஞ்சுப் படபடப்பு, நெஞ்சு இறுக்கதமாகுதல், தலைசுற்றல், மயக்கமடைதல், ஆகிய பக்கவிளைவுகளும் பொதுவாக ஏற்படுகின்றன என்று ஆணையம் கூறியது.

2020ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி முதல் 2021ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை மொத்தம் 11,490,023 ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

அவற்றுள், 14,729 முறை பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன என்று ஆணையம் தெரிவித்தது.

இந்த நிகழ்வுகளில் 747 முறை கடுமையான பக்கவிளைவுகள் என்று வகைப்படுத்தப்பட்டதாக அது கூறியது.

ஃபைசர், மொடர்னா ஆகியவற்றை முதல், இரண்டாம் தடுப்பூசிகளாகப் போட்டுக் கொண்டவர்களுக்கும் அவற்றைக் கூடுதல் தடுப்பூசியாகப் போட்டுக் கொண்டவர்களுக்கும் ஒரே மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்பட்டன என்று ஆணையம் குறிப்பிட்டது.

கூடுதல் தடுப்பூசிகளைப் போடும்போது பக்கவிளைவுகள் ஏற்படுவது அதிகரிக்கவில்லை என்று அது தெரிவித்தது.

பட்டதாக தற்போதைக்குத் தகவல் ஏதும் இல்லை.