செல்லப்பிராணிகளை வேட்டையாட தொடங்கிவிட்டது ஹாங்காங்

செல்லப்பிராணிகளை வேட்டையாட தொடங்கிவிட்டது ஹாங்காங்

1 mins read
1f45f2b7-f080-47bb-8410-4f6aac6e03c1
வெள்ளெலிகளைக் கொல்வதற்காக ஹாங்காங்கில் செல்லப்பிராணி விற்கும் கடை ஒன்றுக்குள் அதிகாரிகள் புகுந்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் ஒன்­றின் தொடர்­பில் ஹாங்­காங்­கில் 'ஹேம்ஸ்­டர்' எனப்­படும் வெள்­ளெ­லி­கள் ஆயி­ரக்­க­ணக்­கில் கொல்­லப்­பட வேண்­டும் என்று அந்­நாட்டு அர­சாங்­கம் நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது. இதை­ய­டுத்து, நாட்­டி­லுள்ள செல்­லப்­பி­ராணி விரும்­பி­களும் விலங்­கு­வ­தைக்கு எதி­ரான குழுக்­களும் எதிர்ப்­புக் குரல் எழுப்பி, இணை­யத்­தில் மனு ஒன்­றைத் தொடங்­கி­யுள்­ள­னர்.

நெதர்­லாந்­தி­லி­ருந்து வந்த சுமார் 2,000 வெள்­ளெ­லி­க­ளு­டன் முயல்­கள், சின்­சில்­லாக்­கள் போன்­ற­வற்­றை­யும் கொல்ல அர­சாங்­கம் அறி­வித்­தி­ருந்­தது.

15 கிளை­கள் கொண்ட செல்­லப்­பி­ராணி விற்­கும் 'லிட்­டில் பாஸ்' கடைக்­குச் சென்ற சில­ருக்­குக் கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னதை அடுத்து கிரு­மிப் பர­வலை தடுப்­ப­தற்­காக அதி­கா­ரி­கள் இம்­மு­டிவை எடுத்­த­னர்.

இருப்­பி­னும், அறி­விப்பை அடுத்து தொடங்­கப்­பட்ட இணைய மனு­வில், ஏரா­ள­மா­னோர் தங்­க­ளின் எதிர்ப்­பைப் பதி­வு­செய்­து­விட்­ட­னர்.

இதற்­கி­டையே, டிசம்­பர் 22 முதல் 'லிட்­டில் பாஸ் கடை­யி­லி­ருந்து வெள்­ளெலி வாங்­கி­யோர், அதனை 'கரு­ணைக் கொலை' செய்­வ­தற்­காக கொடுத்­து­வி­டு­மாறு அதி­கா­ரி­கள் அறி­வு­றுத்தி வரு­கின்­ற­னர். இது கரு­ணைக் கொலை அல்ல, கொலை என்­கின்­ற­னர் செல்­லப்­பி­ராணி விரும்­பி­கள்.