‘பிப்ரவரி 28 வரை அனைத்துலகப் பயணிகள் விமானச் சேவைகள் ரத்து’

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் 'ஓமிக்­ரான்' உரு­மா­றிய கிருமி விடுத்த மிரட்­ட­லால் பல நாடு­கள் பய­ணத் தடை­களை மீண்­டும் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றன.

அனைத்­து­ல­கப் பய­ணி­க­ளுக்­கான அதன் வழக்­க­மான விமா­னச் சேவை­களை, இந்­தியா நிறுத்­தி­வைத்­தி­ருந்­தது.

இந்­தத் தடையை பிப்­ர­வரி 28ஆம் தேதி வரை நீட்­டித்­தி­ருப்­ப­தாக இந்­தியா அறி­வித்­துள்­ளது. இந்­தி­யா­வின் சிவில் விமா­னப் போக்கு­வரத்­தின் தலைமை இயக்­கு­ந­ர­கம் இது குறித்த சுற்­ற­றிக்­கையை நேற்று வெளி­யிட்­டது.

இந்­தி­யா­வுக்­குச் செல்­லும் விமா­னச் சேவை­க­ளுக்­கும் அங்­கி­ருந்து புறப்­படும் விமா­னச் சேவை­க­ளுக்­கும் இப்­பு­திய நடை­முறை பொருந்­தும் என்று அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இருப்­பி­னும் அனைத்­து­லக சரக்கு விமா­னச் செயல்­பா­டு­களும் இயக்­கு­ந­ர­கம் முன்­ன­தாக அனு­மதி அளித்த இதர விமா­னச் சேவை­களும் இத­னால் பாதிக்­கப்­ப­டாது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கொவிட்-19 கொள்­ளை­நோய் சூழல் கருதி 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்­தியா அதன் அனைத்­து­லக விமா­னச் சேவை­க­ளைத் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­தது.

மற்ற நாடு­க­ளு­டன் செய்­யப்­பட்ட தடுப்­பூசி போட்­டோ­ருக்­கான பய­ணப் பாதை ஏற்­பாட்­டின் கீழ், அதே ஆண்டு ஜூலை மாதத்­தி­லி­ருந்து விமா­னச் சேவை­கள் மீண்­டும் தொடங்­கின.

இதன்­படி, 20க்கும் மேற்­பட்ட நாடு­களு­டன் இந்­தியா அத்­தகைய ஏற்­பாட்­டைச் செய்­து­கொண்­டுள்­ளது. இக்­கு­றிப்­பிட்ட நாடு­க­ளு­ட­னான விமா­னப் பய­ணங்­கள் பாதிக்­கப்­ப­டாது என்று அறிக்­கை­யில் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டது.

வழக்­க­மான அனைத்­து­லக விமா­னச் சேவை­க­ளைக் கடந்த ஆண்டு டிசம்­பர் 15ஆம் தேதி முதல், இந்­தியா மீண்­டும் தொடங்­கத் திட்­ட­மிட்­டி­ருந்­தது.

ஆனால் ஓமிக்­ரான் வகைக் கிரு­மிப் பர­வலை அடுத்து, நாடு­கள் பல பய­ணத் தடை­களை மீண்­டும் நடப்­புக்­குக் கொண்டு வந்­தன. இத­னால் விமா­னச் சேவை­க­ளைத் தொடங்கி வைக்­கும் திட்­டத்தை இந்­தியா தள்­ளி­வைத்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!