'உலக நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை நீக்க அல்லது தளர்த்த வேண்டும்'

'உலக நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை நீக்க அல்லது தளர்த்த வேண்டும்'

1 mins read
c0f79130-1141-453b-9244-4c6ad89d99c5
அமெரிக்காவின் சால்ட் லேக் நகரில் உள்ள சால்ட் லேக் நகர அனைத்துலக விமான நிலையம். ஓமிக்ரான் பரவலால் பல நாடுகள் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளன. இந்நிலையில் அனைத்துலகப் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கும்படி அல்லது தளர்த்தும்படி உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம்  ஆலோசனை கூறியுள்ளது -

அனைத்துலகப் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கும்படி அல்லது தளர்த்தும்படி உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் ஆலோசனை கூறியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக் குழு சந்தித்து அதன் பரிந்துரைகளை தலைமை இயக்குனரிடம் முன்வைத்தது.

ஓமிக்ரான் பரவலால் பல நாடுகள் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ள நிலையில் அனைத்துலகப் பயணங்கள் தொடர்பான பரிந்துரை முன்வைக்கப்பட்டது.

கொவிட்-19 பெருந்தொற்று அனைத்துலக அளவில் பெரும் கவலைக்குரிய ஒன்று என்று இன்னமும் கருதுவதாக நிறுவனம் கூறியது.

இருந்தபோதும், பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் ஆலோசனையை அது விடுத்துள்ளது.

கொவிட்-19 தடுப்பூசிகள் உலக மக்களுக்குக் கிடைப்பதில் ஏற்றதாழ்வுகள் நிலவுகின்றன.

இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சான்று அளித்தால் மட்டுமே வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடியும் என்பதை ஒரே நிபந்தனையாக முன்வைக்க முடியாது என்று அமைப்பு கூறியது.

முன்னதாக, பரிந்துரைகளை முன்வைத்த அவசரநிலைக் குழு, பயணக் கட்டுப்பாடுகளால் கூடுதல் பயன் இல்லை என்று கூறியிருந்தது.

உலக சுகாதார நிறுவனம் மேலும் சில ஆலோசனைகளை முன்வைத்தது.

மேலும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான கொவிட்-19 பரவல் பற்றிகூடுதல் ஆய்வுகளை நடத்தும்படி உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது.

அதனுடன், 2022 ஜூலை மாதத்துக்குள் உலக மக்களில் 70 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி பேடும் இலக்கை எட்டுவதற்கு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைப்பு வலியுறுத்தியது.