எல்லாரும் தடமறியும் முறையில் சிங்கப்பூரில் ‘டிரேஸ்டுகெதர்’ செயல்திட்டம் தொடங்கி 21 மாதங்கள் ஆகின்றன

சிங்­கப்­பூ­ரில் ஏறக்­கு­றைய அனை­வ­ருமே இப்­போது தேசிய கொவிட்-19 தட­ம­றி­யும் செயல்­திட்­டத்­தில் இருக்­கி­றார்­கள். 'டிரேஸ்டு­கெ­தர்' என்ற அந்தத் திட்­டம் தொடங்­கி 21 மாதங்­கள் ஆகின்­றன.

சிங்­கப்­பூர் மக்­களில் ஆறு வய­துக்­குட்­பட்ட கிட்­டத்­தட்ட அனை­வ­ருமே அந்தத் திட்­டத்­தில் சேர்க்­கப்­பட்டு இருக்­கிறார்­கள் என்று 'அறி­வார்ந்த நாடு, மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­லக அமைப்­பின்' பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்து உள்­ளது.

இருந்­தா­லும் துல்­லி­ய­மான எண்­ணிக்­கையை அந்த அலு­வ­ல­கம் தெரி­விக்­க­வில்லை. டிரேஸ்­டு­கெ­தர் செயல்திட்­டத்­தில் இருந்து ஏறத்­தாழ 3,000 பேர் சென்ற ஆண்­டில் விலக்­கப்­பட்­ட­னர்.

இது, பதி­வு­பெற்ற பய­னீட்­டா­ளர்­களில் 0.056%தான் என்று அலு­வ­ல­கம் தெரி­வித்­தது. டிரேஸ்டு­கெ­தர் திட்­டத்­தில் இருந்து விலக்­கப்­பட்­ட­வர்­களில் சிங்­கப்­பூ­ரை­விட்டு வெளி­யே­றி­விட்ட நீண்­ட­கால அனு­ம­தி­தா­ரர்­கள், மர­ண­மடைந்­த­வர்­கள் போன்­றோர் அடங்­கு­வர்.

அதோடு, தக­வல் பாது­காப்பு காரணங்­க­ளுக்­காக அந்­தச் செயல்­திட்­டத்­தில் இருந்து வில­கிக்கொள்­வ­தா­கக் கேட்டு விண்­ணப்­பித்­த­வர்­களும் அவர்­களில் அடங்­கு­வர்.

இப்­படி 1,155 பேர் கோரிக்கை விடுத்து இருந்­த­னர் என்று 'அறி­வார்ந்த நாடு' திட்­டத்­திற்குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் சென்ற மே மாதம் தெரி­வித்து இருந்­தார்.

கொவிட்-19 நோயா­ளி­க­ளு­டன் அணுக்­கத் தொடர்­பில் இருப்­போரை புளூ­டூத் மூலம் செயல்­படும் செயலி அல்­லது டோக்­கன் வழி­யாக டிரேஸ்­டு­கெ­தர் செயல்­திட்­டம் அடை­யா­ளம் காண்கிறது.

தட­ம­றி­யும் நோக்­கத்­திற்­காக மட்­டுமே டிரேஸ்­டு­கெ­தர் தக­வல்­கள் பயன்­ப­டுத்­தப்­படும் என்று முன்­ன­தாக அர­சாங்­கம் உத்­த­ர­வா­தம் அளித்து இருந்­தது.

என்றாலும் டிரேஸ்­டு­கெ­தர் மூலம் திரட்­டப்­படும் தக­வல்­களைக் குற்­ற­வி­யல் தொடர்­பான புலன்­வி­சா­ர­ணை­களில் பயன்­ப­டுத்த முடி­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டதை அடுத்து ஓராண்­டுக்கு முன் அது பற்றி பர­ப­ரப்­பாக பேச்சு எழுந்­தது.

தொடர்ந்து ஒரு சட்­டம் இயற்­றப்­பட்டது. அதன்­படி, தட­ம­றி­யும் ஏற்­பாட்­டின் மூலம் பெறப்­படும் தக­வல்­கள், ஏழு வகை­கடும் குற்­றச்­செ­யல்­கள் தொடர்­பான புலன்­வி­சா­ர­ணைக்கு மட்­டுமே பயன்­படுத்­தப்­படும் என்ற நிலை உரு­வா­னது.

கொலை, பயங்­க­ர­வா­தம், பாலி­யல் கொடுமை, ஆயு­த­பாணிக் கொள்ளை முத­லா­னவை அத்­த­கைய குற்­றச்செயல்­களில் அடங்­கும்.

டிரேஸ்­டு­கெ­தர் செயல்­திட்­டத்­தில் இருந்து ஒரு­வர் வில­கி­விட்­டால் அவ­ருடைய அடை­யாள எண், தொடர்பு எண் உள்­ளிட்ட பதிவு பெற்ற அனைத்து தக­வல்­களும் டிரேஸ்­டு­கெ­தர் சேமிப்­ப­கத்­தில் இருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாள்களில் அழிக்­கப்­பட்­டு­வி­டும்.

கொவிட்-19 தொற்று கூடு­கிறது. இனி­மேல் அந்­தக் கிரு­மி­யு­டன்­தான் சேர்ந்து வாழ வேண்டி இருக்­கும் என்ற நிலைக்கு ஒட்­டு­மொத்­த­மாக மாற்­ற­மும் இடம்­பெற்று வரு­கிறது. இத்­த­கைய ஒரு நிலையில் டிரேஸ்­டு­கெ­தர் ஏற்­பா­டும் 'சேஃப்என்ட்ரி' தேசிய மின்­னி­லக்க நுழை­வா­யில் முறை­யும் இனி தேவை­தானா என்று சிலர் கேள்வி எழுப்பி இருந்­தார்­கள்.

அதற்குப் பதி­ல­ளித்த சுகா­தார அமைச்சு, அந்த இரண்டு முறை­க­ளுமே கொவிட்-19க்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் போராட்­டத்­தில் தொடர்ந்து முக்­கிய அம்­சங்­களாக இருக்­கின்­றன என்­றும் இப்­போ­தைக்கு அவை அப்­ப­டியே இருந்து வரும் என்­றும் விளக்­கம் அளித்­தது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான தடுப்­பூசி நடப்­புக்கு வரு­வ­தற்கு முன் அந்­தக் கிருமி வேக­மா­கப் பர­வத் தொடங்­கி­ய­போது தட­ம­றி­யும் உத்­தியைப் பரந்த அள­வில் தீவி­ர­மாக சிங்­கப்­பூர் பயன்­ப­டுத்­தி­யது. பிறகு சிங்­கப்­பூர் தடுப்­பூ­சி­யில் பெரும் முன்­னேற்­றம் கண்ட நிலை­யில் அந்த அணு­கு­மு­றை­ மாறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!