‘விடிஎல்’ ஏற்பாடு: 100,000 பேர் சிங்கப்பூர் வருகை

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையில் கடந்த நவம்­பர் 29ஆம் தேதி தொடங்கிய தனிமை உத்­த­ர­வில்­லாத 'விடிஎல்' பயணப்பாதையின் கீழ் ஏறத்­தாழ 100,000 பேர் சிங்­கப்­பூ­ருக்கு வந்தனர்.

அவர்­களில் ஏறக்­கு­றைய 55,000 பேர் தரை விடி­எல் பாதை வழி கடற்­பா­லத்­தைக் கடந்து வந்­துள்­ள­னர். சுமார் 44,000 பேர் விமான விடி­எல் மூலம் வந்­த­னர்.

அந்­தப் பய­ணப்பாதைத் திட்­டம் டிசம்பர் 20ஆம் தேதி விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது. அதற்குப் பிறகு தரை­வழியாக ஏறக்­கு­றைய 43,000 பேர் சிங்­கப்­பூ­ருக்­குள் வந்­தி­ருப்­பதாக வர்த்­தக, தொழில் அமைச்சு செவ்­வாய்க்­கி­ழமை கூறி­யது.

இந்த விரி­வாக்­கம் கார­ண­மாக மலேசி­யா­வுக்கு சிங்­கப்­பூர் குடி­மக்­கள் போக முடிந்­தது. அதே­போல, மலே­சியக் குடி­மக்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வர கதவு திறந்து விடப்­பட்­டது.

இத­னி­டையே, சென்ற மாதம் அறி­விக்­கப்­பட்­ட­தைப்போல இன்று முதல் தரை 'விடி­எல்' பாதை மூலம் அனு­ம­திக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் பய­ணச்­சீட்டு விற்­ப­னை­யும் தற்­கா­லி­க­மாக பாதி அள­வுக்குக் குறைக்­கப்­படும் என்று இந்த அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறினார்.

''தொடர்ந்து சூழ்­நி­லை­களை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வோம். சிங்­கப்­பூ­ரி­லும் மலே­சி­யா­வி­லும் உல­கி­லும் நில­வக்­கூ­டிய பொதுச் சுகா­தார சூழ்­நிலையைக் கருத்­தில்­கொண்டு அதற்­கேற்ப விடி­எல் வரம்பை நாங்­கள் சரி­ப­டுத்­து­வோம்," என்று அந்­தப் பேச்­சா­ளர் மேலும் தெரி­வித்­தார்.

இதே­போன்ற குறைப்பு அனைத்து விமான விடி­எல் பய­ணி­க­ளுக்­கும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. அதோடு கடுமை யான பரிசோதனைக் கட்டுப்பாடுகளும் நடப்புக்கு வந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!