விரைவில் ஓமிக்ரான் அலை

அதிகம் பரவக்கூடிய ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி சமூகத்தில் பரவி வருவதால் சிங்கப்பூரில் விரைவில் கொவிட்-19 பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்கலாம் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

மூத்த குடிமக்களையும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களையும் பாதுகாக்கும் விதமாக, இம்மாதம் 24ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 20ஆம் தேதிவரை மருத்துவமனை உள்நோயாளிப் பிரிவுகளிலும் பராமரிப்பு இல்லங்களிலும் வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை.

12 முதல் 17 வயதிற்கு உட்பட்டோருக்கும் கூடுதல் தடுப்பூசி போடப்படவுள்ளது.

கொரோனா பரவும் அபாயத்தைக் குறைவாக வைத்திருக்கவும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பின்மீதான நெருக்கடியைக் குறைக்கவும் ஏதுவாக, ஐந்து பேருக்குமேல் ஒன்றாக உண்ண முடியாது என்பது உள்ளிட்ட இப்போதுள்ள பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் தொடரும் என்று அமைச்சர் கான் தெரிவித்து இருக்கிறார்.

இப்போது அன்றாட பாதிப்பில் கிட்டத்தட்ட 70% ஓமிக்ரானால் ஏற்படுகிறது என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு கான் சொன்னார்.

ஓமிக்ரான் தொற்றியோரில் பெரும்பாலோருக்கு இலேசான பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ‘டெல்டா’ திரிபால் ஏற்பட்ட உச்ச பாதிப்பை ஓமிக்ரான் உச்சம் விஞ்சிவிடலாம் என்று நிதியமைச்சரும் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு லாரன்ஸ் வோங் கூறினார்.

ஓமிக்ரானால் நாளொன்றுக்கு 15,000 பேர் பாதிக்கப்படக்கூடும் என்று அதிகாரிகள் சொன்னதைச் சுட்டிக்காட்டிய அவர், தொற்று பாதிப்பு அதையும் விஞ்ச வாய்ப்புள்ளதாகவும் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!