‘விடிஎல்’ பயணிகளுக்கு ‘ஏஆர்டி’ எளிதாகிறது

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணப் பாதை (விடி­எல்) வழி­யாக சிங்­கப்­பூர் வரு­வோர், இனி வீட்­டை­விட்டு வெளி­யில் செல்லும் நாள்களில் ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) செய்­து­கொண்­டால் போது­ம்.

அவர்­கள் சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­தும் தங்­க­ளது கைப்­பேசி எண்­ணுக்கு அனுப்­பப்­படும் இணைப்பு வழி­யாக 'ஏஆர்டி' பரி­சோ­தனை முடி­வு­களை அனுப்பி வைக்­க­வும் தேவை­யில்லை.

அத்­து­டன், அவர்கள் இங்கு வந்­தி­றங்­கியபின் 3ஆம், 7ஆம் நாள்­களில் விரை­வுப் பரி­சோ­தனை மையங்­க­ளுக்­குச் சென்று, மேற்­பார்­வை­யின்­கீழ் பரிசோதனை செய்து கொள்ளவும் தேவையில்லை.

நாளை மறுநாள் 24ஆம் தேதி திங்கட்கிழமையில் இருந்து இந்த மாற்றங்கள் நடப்பிற்கு வரவுள்ளன.

கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு நேற்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது இதனை அறி­வித்­தது.

இத­னை­ய­டுத்து, கடந்த டிசம்­பர் 6ஆம் தேதிமு­தல் நடப்­பிலிருந்­து­வரும் 'விடி­எல்' பய­ணி­க­ளுக்­கான அன்­றா­டப் பரி­சோ­தனை முறை ஒரு முடி­வுக்கு வரு­கிறது. இந்­தப் பரி­சோ­தனை முறை­ மூ­லமாக இது­நாள்­வரை 700க்கும் மேற்­பட்­டோ­ரி­டம் ஓமிக்­ரான் தொற்று கண்­ட­றி­யப்­பட்டுள்­ளது.

சாங்கி விமான நிலை­யத்­திற்கு பய­ணி­கள் வந்­தி­றங்­கி­ய­தும் கட்­டா­ய­மாக 'பிசி­ஆர்' பரி­சோ­தனை செய்­து­கொள்­ளும் நடை­முறை நீடிக்­கும். ஜோகூ­ரிலிருந்து கடற்­பாலம் வழி­யாக சிங்­கப்­பூர் வந்­த­தும் 'ஏஆர்டி' பரி­சோ­தனை செய்­து­கொள்­ளும் நடை­மு­றை­யும் தொடர்ந்து நடப்­பில் இருக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!