2ஆம் உலகப் போரின்போது மாயமான விமானம் 77 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் கண்டுபிடிப்பு

2ஆம் உலகப் போரின்போது மாயமான விமானம் 77 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் கண்டுபிடிப்பு

2 mins read
388bd059-e88c-422b-bca0-48e361f47eb5
பல மாத தேடலுக்குப் பிறகு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநில இமயமலைப் பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தேடுதலின்போது பயண வழிகாட்டிகள் மூவர் இறந்துவிட்டனர். படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

இரண்­டாம் உல­கப் போரின்­போது காணா­மல்போன விமா­னத்­தின் உடைந்த பாகங்­கள் 77 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இம­ய­மலை­யில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

1945ஆம் ஆண்­டின் முதல் வாரத்­தில் தென்­சீ­னா­வின் குன்­மிங் பகு­தி­யில் இருந்து 13 பேரு­டன் அந்த சி-46 விமானம் புறப்­பட்­டுச் சென்­றது. ஆயி­னும், இந்­தி­யா­வின் அரு­ணாச்­சலப் பிர­தேச மாநி­லத்­திற்­கு­மேல் பறந்­த­போது, மோச­மான வானிலை கார­ண­மாக விமா­னம் மாய­மா­னது.

"அதன்­பின் ­வி­மா­னம் குறித்து எந்­தத் தக­வ­லும் இல்லை," என்­றார் தேடு­தல் நட­வடிக்­கை­யைத் தலை­மை­யேற்று நடத்­திய அமெ­ரிக்­கர் கிளேட்­டன் குலஸ்.

விமா­னத்­தில் பய­ணம் செய்த ஒரு­வ­ரின் மக­னான திரு பில் ஷெரர் கேட்­டுக்­கொண்­டதை அடுத்து, அவர் இந்­தத் தேடு­தல் முயற்­சி­யைத் தொடங்­கி­னார்.

தேடு­தல் பய­ணம் பல மாதங்­கள் நீடித்­தது. உள்­ளூ­ரின் லிசு இனத்­தைச் சேர்ந்த சுற்­றுப்­ப­யண வழி­காட்­டி­க­ளின் துணை­யுடன் மார்பு உய­ரத்­திற்கு நீர் ஓடிய ஆறு­க­ளைக் கடந்­தும் உய­ர­மான மலைப்­ப­கு­தி­யில் உறை­வெப்­ப­நி­லை­யில் முகா­மிட்­டும் தேடு­தல் பணி தொடர்ந்­தது.

இந்த முயற்­சி­யின் தொடக்­கத்­தி­லேயே உடல்­வெப்­ப­நிலை மிக­வும் குறைந்து, பயண வழி­காட்­டி­கள் மூவர் மாண்­டு­போ­யி­னர்.

இருப்­பி­னும், தங்­க­ளின் விடா­மு­யற்­சி­யால் பனி மூடி­ய மலை­மு­கட்­டில் விமா­னத்­தின் உடைந்த பாகங்­களை அக்­கு­ழு­வி­னர் கண்­டு­பி­டித்­த­னர்.

விமா­னத்­தின் வால் பகு­தி­யில் இருந்த எண்­ணைக் கொண்டு அவர்­கள் அதனை அடை­யா­ளம் கண்­ட­னர்.

"துய­ரத்­திற்கு இடை­யில் இது மகிழ்ச்சி­யான செய்தி," என்­றார் தந்­தை­யைப் பறி­கொ­டுத்த திரு ஷெரர்.

தந்தையின்றித் தாம் வளர்ந்ததாகக் கூறிய திரு ஷெரர், தாம் 13 மாதக் குழந்­தை­யாக இருந்­த­போது, தம் தந்தை மாய­மான செய்தி குறித்து தம் தாயா­ருக்கு தந்தி கிடைத்ததை நினை­வு­கூர்ந்­தார்.