மீண்டும் பாத்தாம், பிந்தான் செல்லலாம்

மீண்டும் பாத்தாம், பிந்தான் செல்லலாம்

1 mins read

சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே பிர­ப­ல­மான இந்­தோ­னீ­சி­யா­வின் பாத்­தாம், பிந்­தான் தீவு­கள் மீண்டும் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்­குத் திறந்து­விடப்­ப­ட­வுள்­ளன. உல்­லா­சப் பயணம் மேற்­கொள்ள விரும்­பும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்கு இவ்­விரு தீவு­க­ளை­யும் திறந்­து­விட இந்­தோ­னீ­சியா திட்­ட­மிட்­டுள்ளது.

சிங்­கப்­பூர், இந்­தோ­னீ­சியா இரண்டிலும் கிரு­மித்­தொற்று நில­வ­ரம் கட்­டுக்­குள் இருப்­பதால் இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் பய­ணப் பாதையை திறக்கத் தயா­ராய் இருப்­ப­தாக அந்­நாட்­டின் பொரு­ளி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் ஏர்­லாங்கா ஹார்ட்­டார்டோ தெரி­வித்­தார்.

பயணப் பாதையை அமைப்பதற்குத் தேவையான அனைத்து விதிமுறைகளையும் செயல்படுத்திவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

"பாத்­தாம், பிந்­தான் ஆகி­ய­வற்­றுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யி­லான பய­ணப் பாதையைத் திறப்பதை இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் ஊக்­கு­விக்­கிறது... இது சுற்றுப்­பயணத் துறை இயங்­கு­வ­தற்கு உத­வும்," என்று திரு ஏர்­லாங்கா கூறி­னார். பய­ணப் பாதை எப்­போது திறக்­கப்­படும் என்­பது குறித்து அவர் விவ­ரம் ஏதும் அளிக்­க­வில்லை.

இந்த ஏற்­பாட்­டின்­கீழ் பிந்­தான், பாத்­தாம் செல்ல விரும்­பு­வோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்­க­வேண்­டும், பய­ணம் செய்­வ­தற்கு முன் குறைந்­தது 14 நாள்­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரில் இருந்­தி­ருக்­க­வேண்­டும். இந்­தோ­னீ­சி­யா­வின் கொவிட்-19 செயற்­குழு வெளி­யிட்ட அறிக்கை இத­னைக் குறிப்­பிட்டது.

மேலும், சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து புறப்­ப­டு­வதற்கு முன்பு மூன்று நாள்­க­ளுக்­குள் பய­ணி­கள் பிசி­ஆர் பரி­சோ­த­னையை மேற்­கொள்­ள­வேண்­டும். இந்­தோ­னீ­சியா சென்­ற­டைந்த பிறகு மேலும் ஒரு பிசி­ஆர் பரி­சோ­த­னையை மேற்­கொள்­ள­வேண்­டும்.

நோய்க்­கான அறி­கு­றி­கள் அதி­கம் இல்­லாத பய­ணி­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர். மோச­மான அறி­கு­றி­கள் இருப்­போர் மருத்து­வ­ம­னைக்கு அனுப்­பப்­ப­டு­வர்.