2021ல் சிங்கப்பூர் வந்த அனைத்துலக பயணி எண்ணிக்கையில் வரலாறு காணாத தொய்வு

2021ல் சிங்கப்பூர் வந்த அனைத்துலக பயணி எண்ணிக்கையில் வரலாறு காணாத தொய்வு

2 mins read
6af77109-c431-4ae9-93f7-78be5310e2df
சிங்கப்பூருக்கு, வரலாறு காணாத தொய்வாக, கடந்த ஆண்டு 330,000 அனைத்துலக பயணிகள் மட்டுமே வந்தனர். கடந்த 2020ஆம் சிங்கப்பூர் வந்த அனைத்துலகப் பயணிகளுடன் ஒப்பிடும்போது இது 80 விழுக்காடு குறைவாகும்.  -

சிங்கப்பூருக்கு, வரலாறு காணாத தொய்வாக, கடந்த ஆண்டு 330,000 அனைத்துலக பயணிகள் மட்டுமே வந்தனர்.

கடந்த 2020ஆம் சிங்கப்பூர் வந்த அனைத்துலகப் பயணிகளுடன் ஒப்பிடும்போது இது 80 விழுக்காடு குறைவாகும்.

சிங்கப்பூர் கடந்த ஆண்டு வந்த பயணிகள் இங்கு செலவு செய்த மொத்தத் தொகை பாதிக்கு மேல் குறைந்து, 1.9 பில்லியன் ஆனது என்று மதிப்பிடப்படுகிறது.

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 25) அன்று வெளியிட்ட 2021க்கான முன்னோட்ட தகவல்கள் இதைத் தெரிவித்தன.

ஒப்புநோக்க, கடந்த 2020ஆம் ஆண்டு 2.7 மில்லியன் அனைத்துலகப் பயணிகள் சிங்கப்பூர் வந்தனர். அவர்கள் இங்கு செலவு செய்த மொத்தத் தொகை $4.8 பில்லியன் வெள்ளி ஆகும்.

ஆனால் பயணிகள் வரவு மீட்சி அடையும் ஊக்கம் அளிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் கூறியது.

கடந்த 2021 ஆண்டின் கடைசி மூன்று காலாண்டுகளில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கழகம் குறிப்பிட்டது.

2020ஆம் ஆண்டு கடைசி 9 ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டின் கடைசி 9 மாதங்களில் அனைத்துலக வருகையாளர்களின் எண்ணிக்கை 221 விழுக்காடு கூடியது.

அவர்கள் செலவிட்ட தொகையும் 92 விழுக்காடு அதிகமானது.

சீனா, இந்தியா, இந்தோனீசியா ஆகிய மூன்று நாடுகளிலிருந்து கடந்த ஆண்டு அதிகமான பயணிகள் சிங்கப்பூர் வந்தனர்.

சீனாவிலிருந்து 88 ஆயிரம் பேரும் இந்தியாவிருந்து 54,000 பேரும் இந்தோனீசியாவிலிருந்து 33,000 பேரும் சிங்கப்பூர் வந்தனர்.

சீனர்கள் இங்கு செலவிட்ட தொகை $432 மில்லியன் வெள்ளி.

இந்தோனீசியாவிலிருந்து இங்கு வந்தவர்கள் $127 மில்லியன் வெள்ளி செலவிட்டனர்.

சிங்கப்பூர் வந்த இந்தியர்கள் $58 மில்லியன் செலவு செய்தனர்.

இவ்வேளையில், நிலைமை இன்னமும் குழப்பமாக இருப்பதால் சுற்றுப்பயணத் துறைக்கு முன்னுரைப்பு செய்ய தங்களால் இயலாது என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் தலைமை நிர்வாகி கீத் டான் கூறினார்.