சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் பிந்தான் தீவில் தலைவர்களின் தனிப்பட்ட சந்திப்பு நடத்தியுள்ளனர்.
தனிப்பட்ட சந்திப்புக்குப் பின்னர், மற்ற அமைச்சர்கள், அதிகாரிகளுடன் சேர்ந்து இருவரும் சந்திப்பு நடத்தினர்.
அதில் ஆகாயவெளி நிர்வாகம், தற்காப்பு ஒத்துழைப்பு, குற்றவாளிகள் ஒப்படைப்பு போன்ற ஒப்பந்தங்களும் புரிந்துணர்வு குறிப்புகளும் இன்று கையெழுத்தாகின்றன.
பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் பிரதமர் லீயும் இந்தோனீசிய அதிபரும் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர்.
நிதி, பொருளியல் ஒத்துழைப்பு, பசுமைப் பொருளியல், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான பரந்துபட்ட ஒத்துழைப்பு பற்றி அவர்கள் இருவரும் பேசினார்.