எல்லைகளைத் திறக்க மலேசியா திட்டம்

எல்லைகளைத் திறக்க மலேசியா திட்டம்

2 mins read

மலே­சி­யா­வின் எல்­லை­கள் மீண்­டும் திறக்­கப்­ப­ட­லாம் என அந்­நாட்டு பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் கூறி­யுள்­ளார்.

அந்த நட­வ­டிக்கை நாட்­டின் பொரு­ளி­யல் வளர்ச்­சியை ஊக்­கு­விக்க உத­வும் என்று அவர் தெரி வித்­தார். மேலும், பய­ணக் கட்­டுப்­பாடு களால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் அந்­நாட்­டின் சுற்­று­லாத் துறையை மீண்­டும் தூக்கி நிறுத்த இது கைகொ­டுக்­கும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளுக்­கான கட்டுப்பாடுகளை மற்ற நாடு­கள் தங்­கள் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­யுள்­ளன. அது போன்று மலே­சி­யா­வும் பின்­பற்­ற­லாம் என்று பிர­த­மர் கருத்­து­ரைத்­தார்.

ஆனால் அவ்­வாறு செய்­வ­தற்கு முன்பு கூடு­தல் தடுப்­பூ­சித் திட்­டம் நிறை­வேற்­ற­பட வேண்­டி­யுள்­ளது. இத­னால் சுகா­தார அமைச்சு, இது குறித்து முடிவு எடுக்­கும் என தெரி­விக்­கப்­பட்­டது. மலே­சி­யா­வின் எல்­லை­கள், கடந்த மார்ச் 2020ஆம் ஆண்­டி­லி­ருந்து மூடப்­பட்­டுள்­ளன.

சிங்­கப்­பூ­ருக்­கும் அந்­நாட்­டுக்­கும் இடை­யி­லான தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணப் பாதை­யின்­கீழ் வரும் பயணிகள் மட்­டுமே தற்­போது அனு­ம­திக்­கப்­பட்டு வரு­கின்­றனர். இதற்­கி­டையே, அங்­குள்ள பள்­ளி­களில் கொவிட் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­கிறது.

முகக்கவ­சம் அணி­யா­தது, பாது­காப்பு இடை­வெ­ளி­யைப் பின்­பற்­றா­தது ஆகி­யவை அதற்­குக் கார­ணம்.

கிரு­மித்­தொற்று அறி­கு­றி­கள் இருந்­தும், ஆசி­ரி­யர்­கள் பலர் பள்ளி களுக்­குச் செல்­வ­தாக அந்­நாட்டு சுகா­தார அமைச்சு கூறி­யது.

அதி­க­ரித்­துள்ள சம்­ப­வங்­க­ளால் ஜோகூர், கெடா, மலாக்கா ஆகிய மாநி­லங்­களில் பல பள்­ளி­கள் மூடப்­பட்­டுள்­ளன. இவ்­வே­ளை­யில் ஐந்து வய­தி­லி­ருந்து 11 வயது உள்ள பிள்ளைக­ளுக்­குத் தடுப்­பூசி போடும் திட்­டத்தை மலே­சியா தொடங்­க­வுள்­ளது.

ஆனால் 60 விழுக்­காட்­டுக்­கும் குறை­வான பெற்­றோர்­களே தங்­கள் பிள்­ளை­க­ளுக்கு தடுப்­பூசி போட விரும்­பு­கின்­ற­னர். பக்கவிளை­வு­கள் குறித்து பல பெற்­றோர் அக்­கறை கொண்­டுள்­ள­னர்.

மலே­சி­யா­வில் நேற்று மொத்தம் 4,744 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி வாகின.