கொவிட்-19 தொற்று, சிங்கப்பூரை வாட்டியிருந்தாலும் முதலீடுகளை ஈர்ப்பதில் அது துவண்டுவிடவில்லை.
2021ல் பல்வேறு சவால்களுக்கு இடையே 11.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகளை சிங்கப்பூர் ஈர்த்துள்ளது.
பெரும்பாலும் குறைகடத்தி மற்றும் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் உறுதி பெற்றுள்ள இந்தத் திட்டங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 17,376 புதிய வேலைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றில் எழுபது விழுக்காடு வேலை வாய்ப்புகள் 'பிஎம்இடி' எனப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்கு உரியவை. இதனால் பெரும்பாலான வேலைகளை உள்ளூர் மக்கள் எடுத்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைகடத்தி, உயிரியல் தொழில்நுட்பத் துறையில் பாதிக்கு மேற்பட்ட முதலீடுகள் உறுதியாகி உள்ளன.
இது, சிங்கப்பூர் பொருளியல் மேம்பாட்டுக் கழகத்தின் எட்டு பில்லியன் வெள்ளி முதல் பத்து பில்லியன் வெள்ளி வரையிலான நடுத்தர, நீண்டகால இலக்கைமிஞ்சியுள்ளது.
வேளாண்-உணவு, ரசாயனம் மற்றும் பொருட்கள், மின்னணுவியல் போன்ற துறைகளிலும் பரவலாக புதிய முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளளன.
பொருளியல் மேம்பாட்டுக் கழகம், மெய்நிகர் வழியாக நேற்று நடைபெற்ற வருடாந்திர மதிப்பீட்டு நிகழ்ச்சியில் இந்த விவரங் களை வெளியிட்டது.
அப்போது பேசிய பொருளியல் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரான பே ஸ்வான் ஜின், கொள்ளைநோய் இடையூறு களுக்கு இடையே 2021ல் வலுவான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்றார்.
"ஆசியாவில் நிறுவனங்கள் தங்களுடைய வட்டார தலைமை யகங்களை அைமக்கவும் உலகளாவிய தலைமையக நடவடிக்கைகளுக்கும் சிங்கப்பூர் விருப்பமான இடமாக இருப்பதை இது மறுபடியும் உறுதி செய்துள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த அக்டோபரில் பொருளி யல் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு ஏற்ற ஜாக்குலின் போ, குறை கடத்திக்கு உலகளாவிய தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளதால் 2021ல் அத்துறையில் சிங்கப்பூர் பெரும் முதலீடுகளை ஈர்க்க முடிந்தது என்றார்.
அவற்றில், ஜெர்மன் நாட்டின் சில்ட்ரானிக் நிறுவனம், கடந்த அக்டோபர் மாதம் $3 பில்லியன் வெள்ளி செலவில் கணினி சில்லு தயாரிப்பு வசதியை அமைக்கப்போவதாக அறிவித்தது. இது, உயர்தர சில்லுகளை அதிக அளவில் தயாரிக்கும் நாடாக சிங்கப்பூரை உயர்த்தி உள்ளது என்றும் அவர் கூறினார்.
2021ஆம் ஆண்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவு.
2020ல் 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் சாதனை அளவாக 17.2 பில்லியன் வெள்ளி நிலையான முதலீடுகள் கொண்டு வரப்பட்டன. இவற்றில் பெரும் பாலானவை மின்னணுவியல், ரசாயனம், ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறைகளைச் சேர்ந்தவை.
2021ல் பொருளியல் மேம்பாட்டுக் கழகம் அதன் அனைத்து நடுத்தர, நீண்டகால இலக்கு களைத் தாண்டி செயல்பட்டுள்ளது.
இதனால் 17,000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளாக சிங்கப்பூருக்கு முதலீடுகளை ஈர்ப்பதில் பொருளியல் மேம்பாட்டுக் கழகம் திறம்பட செயல்பட்டு வருகிறது.
இது, முழுவேலை வாய்ப்பு, சிறந்த நிலப் பயன்பாடு, தொழில்நுட்பப் பரிமாற்றம், திறன் மேம்பாடு ஆகியவற்றை ஏற்படுத்தித் தந்துள்ளது.

