நெகிழிப் பைக்கு 5 முதல் 10 காசு கட்டணம்

நெகிழிப் பைக்கு 5 முதல் 10 காசு கட்டணம்

2 mins read

அடுத்த ஆண்டில் இருந்து பயனீட்டாளர்களிடம் பேரங்காடிகள் வசூலிக்கக்கூடும்

அடுத்த ஆண்­டின் முற்­ப­கு­தி­யில் இருந்து, ஒரு­முறை மட்­டும் பயன்­படுத்­தக்­கூ­டிய நெகி­ழிப் பைக­ளுக்­குப் பய­னீட்­டா­ளர்­க­ளி­டம் ஐந்து முதல் பத்­துக் காசு வரை பேரங்­கா­டி­கள் வசூ­லிக்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஒற்­றைப் பயன்­பாட்­டு நெகிழிப் பைக­ளுக்­கான கட்­ட­ணம் குறித்த வழி­காட்டி நெறி­மு­றை­களை தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் நேற்று வெளி­யிட்­டது.

ஒரு­முறை பயன்­ப­டுத்­தி­விட்டு, வீசி­யெ­றி­யக்­கூ­டிய பைகளின் பயன்­பாட்­டைக் குறைத்து, பலமுறை பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பைகளுக்கு மாறுவதை ஊக்­கு­விப்பதே அந்த நெறிமுறைகளின் நோக்­கம்.

சிங்­கப்­பூர் கழிவு உரு­வாக்­கத்­தைக் குறைப்­ப­தற்­கான அர­சாங்­கப் பரிந்­து­ரை­க­ளின் ஒரு பகு­தி­யாக அந்த நெறி­மு­றை­கள் அமைந்­துள்­ளன.

இங்­குள்ள பெரும்­பா­லான பேரங்­கா­டி­கள் ஒற்­றைப் பயன்­பாட்டு நெகிழிப் பைக­ளுக்­குக் கட்­ட­ணம் வசூ­லிப்­பதை நடை­முறைப்­ப­டுத்­தும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இணை­யம் வழி­யா­கப் பொருள் வாங்­கு­வ­தற்கு இது பொருந்­தாது.

புதிய வழி­காட்டி நெறி­மு­றை­களின்­படி, அத்­த­கைய பைகள் எத்­தனை வழங்­கப்­பட்­டுள்­ளன, அதற்­காக வசூ­லிக்­கப்­பட்ட மொத்த தொகை எவ்வளவு, அதனை அவை எவ்­வாறு பயன்­ப­டுத்­து­கின்­றன போன்ற விவ­ரங்­க­ளைப் பேரங்­கா­டி­கள் வெளி­யிட வேண்­டும்.

ஒற்­றைப் பயன்­பாட்டு நெகி­ழிப் பைக­ளுக்­குக் கட்­ட­ணம் வசூ­லிக்க வேண்­டும் என்று கடந்த பல ஆண்டு­க­ளா­கவே சுற்­றுச்­சூ­ழல் குழுக்­கள் கோரி வரு­கின்­றன.

சரா­ச­ரி­யாக ஒரு­வ­ருக்கு 146 பைகள் என, ஓராண்­டில் 820 மில்­லி­யன் நெகி­ழிப் பைகள் பேரங்­கா­டி­களில் இருந்து பெற்­றுச் செல்­லப்­ப­டு­கின்­றன என்­பது லாப நோக்­க­மற்ற 'சிங்­கப்­பூர் சுற்­றுச்­சூழல் மன்­றம்' கடந்த 2018ஆம் ஆண்டு நடத்­திய ஆய்­வின்­மூ­லம் தெரி­ய­வந்­தது.

சில கடை­கள் ஏற்­கெ­னவே நெகி­ழிப் பைக­ளுக்­குக் கட்­ட­ணம் வசூ­லித்து வரு­கின்­றன. எடுத்­துக்­காட்­டாக, ஃபேர்பி­ரைஸ் குழு­மம் 2019 நவம்­பர் மாதத்­தில் இருந்து தனது சில குறிப்­பிட்ட கடை­களில் நெகி­ழிப் பைக­ளுக்கு 20 காசு வசூ­லித்து வரு­கிறது.

இந்த வழி­காட்டி நெறி­மு­றை­கள் தொடர்­பான தங்­க­ளது கருத்து­களை அர­சாங்­கத்­தின் கருத்­தறி­யும் பிரி­வான 'ரீச்' இணை­யத்­தளம் வழி­யாக அடுத்த மாதம் 17ஆம் தேதிக்­குள் பொது­மக்­கள் தெரி­விக்­க­லாம்.