இரட்டையர் மரணம்: உடல்கள் காணப்பட்ட இடத்தில் தந்தை

1 mins read
3fe494ab-e5e9-4ee4-9520-8645b98558dd
சிறார் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட கால்வாய்ப் பகுதிக்கு அவர்களின் தந்தை சேவியர் யாப் ஜுங் ஹோனை (இடது) காவல்துறை நேற்று அழைத்துச் சென்று விசாரித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இரண்டு 11 வயது சிறு­வர்­க­ளின் சட­லங்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்ட கால்­வாய்ப் பகு­திக்கு அவர்­க­ளின் தந்தையான 48 வயது சேவி­யர் யாப் ஜுங் ஹோனை நேற்று காவல்­துறை அழைத்­துச் சென்­றது.

தமது இரட்­டைப் பிள்­ளை­களில் ஒரு­வ­ரான ஈத்­தன் யாப் இ செர்­னைக் கொன்­ற­தா­கக் கூறி, கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று யாப்­மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது. மாண்டு கிடந்த இன்­னொரு மகன் ஆஸ்­டன் யாப் காய் ஷெர்ன் என அடை­யா­ளம் காணப்­பட்­டது.

நேற்­றுப் பிற்­ப­கல் 3.10 மணி­ய­ள­வில் யாப் சம்­பவ இடத்­திற்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார். கிட்­டத்­தட்ட 35 நிமி­டங்­கள் அவ­ரும் காவல்­துறை அதி­கா­ரி­களும் அங்கு இருந்­த­னர். பின்­னர் தாம் வந்த கறுப்­பு­நிற வேனி­லேயே அவர் ஏற்­றிச் செல்­லப்­பட்­டார்.

அவர் சென்ற பின்­ன­ரும் விசா­ரணை அதி­கா­ரி­கள் அங்­கி­ருந்­தனர். பின்­னர் மாலை 5 மணி­ அள­வில் விசா­ரணை அதி­கா­ரி­கள் அங்­கி­ருந்து சென்­று­விட்­ட­னர்.

கிரீன்­ரிட்ஜ் கிர­சென்ட் பகுதியில் உள்ள ஒரு விளை­யாட்­டுத் திட­லுக்கு அரு­கே இருக்கும் அந்தக் கால்வாயில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் அந்த இரட்­டை­யர்­க­ளின் உடல்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டன. அதனைத் தொடர்ந்து அவர்­க­ளின் தந்­தை­யான யாப் உதவி­கோரி காவல்­து­றையை அழைத்­தார். மறு­நாள் அவர் கைது­செய்­யப்­பட்­டார்.

மாண்ட இருவரும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் என்று நம்பப்படுகிறது.

இவ்வழக்கு இம்மாதம் 31ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கொலைக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், யாப்பிற்கு மரண தண்டனை விதிக்கப்படும்.