கனடிய-அமெரிக்க எல்லையில் குளிரில் மாண்ட குடும்பம்

கனடிய-அமெரிக்க எல்லையில் குளிரில் மாண்ட குடும்பம்

2 mins read
bf070132-b794-4432-af47-6ba5d38cdc25
ஜக்தீஷ் பல்தேவ்பாய் பட்டேலும் (இடது) அவரது குடும்பத்தாரும் கனடிய-அமெரிக்க எல்லைப் பகுதிக்கு அருகே மாண்டுகிடந்தனர். குளிரைத் தாங்க முடியாமல் இவர்கள் மரணமடைந்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

கன­டா­வுக்­கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் இடையே உள்ள எல்­லைப் பகு­தி­யில் மாண்­டு­கி­டந்த இந்­தி­யா­வைச் சேர்ந்த நால்­வர், 39 வயது ஜக்­தீஷ் பட்­டேல், 37 வயது வைஷைல்­பென் பட்­டேல், இவ்­விரு­வ­ரின் பிள்­ளை­க­ளான 11 வயது விஹாங்கி, மூன்று வயது தார்க்­மிக் என்று அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­னர். கன­டா­வின் மனிட்­டோபா மாநி­லத்­திற்கு அருகே மோச­மான குளி­ரைத் தாங்­க­மு­டி­யா­மல் இவர்­கள் உயி­ரி­ழந்­த­னர்.

இவர்­கள் கால்­ந­டை­யாக அமெ­ரிக்­கா­விற்­குள் நுழைய முயன்­ற­போது வெப்­ப­நிலை பூஜ்­யத்­திற்கு 35 டிகிரி செல்­சியசுக்குக் குறை­வாக இருந்­தது. அப்­போது இரவு வேளை.

இம்­மா­தம் 19ஆம் தேதி­யன்று எல்­லைப் பகு­திக்கு அருகே இருந்த திட­லில் இவர்­களின் உடல்­கள் காணப்­பட்­டன. கன­டா­வுக்­கான இந்­தி­யத் தூத­ர­கம் மாண்­டோ­ரின் அடை­யா­ளத்தை அறி­வித்­தது. அதை கன­டா­வின் காவல்­து­றை­யி­னர் உறு­திப்­படுத்­தி­னர்.

ஆள்கடத்தல் நட­வ­டிக்­கை­யோடு இவர்­க­ளின் மர­ணம் தொடர்­பு­டை­ய­தாக இருக்­க­லாம் என்று கன­டிய அதி­கா­ரி­கள் நம்­பு­கின்­ற­னர். இம்­மா­தம் 12ஆம் தேதி­யன்று இவர்­கள் கன­டா­வின் டொரொன்டோ நக­ருக்கு விமா­னத்­தில் வந்­தி­ருக்­கி­றார்­கள். அங்­கி­ருந்து மனிட்­டோ­பா­விற்­குச் சென்­றி­ருக்­கின்­ற­னர். அதற்­குப் பிறகு 18ஆம் தேதி­வாக்கில் எல்­லைப் பகு­தி­யில் உள்ள எமர்­சன் நக­ருக்­குச் சென்­ற­தாக கன­டியி காவல்­துறை அதி­கா­ரி­கள் தெரி­­வத்­த­னர். அதற்கு மறு­நாள் இரவு இவர்­களின் உடல்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

எமர்­சன் நக­ரில் கன­டிய-அமெ­ரிக்க எல்­லைப் பகு­தி­யில் எந்த வாக­ன­மும் காணப்­ப­ட­வில்லை. ஒரு­வர் வாக­னத்­தில் இறக்­கி­விட்ட பிறகு பட்­டேல் குடும்­பத்­தார் கால்­ந­டை­யா­கப் பய­ணம் மேற்­கொண்­டிருப்­பர் எனக் கரு­தப்­ப­டு­கிறது.

இம்­மா­தம் 19ஆம் தேதி­யன்று மாலை­யில் எல்­லைப் பகு­தி­யில் இந்­தி­யா­வைச் சேர்ந்த ஏழு பேரை அதி­கா­ரி­கள் கண்­ட­றிந்­த­னர். அவர்­க­ளுக்­கும் பட்­டேல் குடும்­பத்­தா­ருக்­கும் தொடர்­புள்­ளதா என்­பது குறித்து கன­டிய காவல்­து­றை­யி­னர் தெரி­விக்­க­வில்லை. அமெ­ரிக்­கா­வின் ஃபுளோரிடா மாநி­லத்­தைச் சேர்ந்த 47 வயது ஸ்டீவ் ஷெண்ட் என்­ப­வர் மீது ஆள்­க­டத்­தல் தொடர்­பில் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது. பட்­டேல் குடும்­பத்­தாரின் உடல்­கள் கண்ெட­டுக்­கப்­பட்ட அன்று அவர் 15 பேரை ஏற்­றக்­கூ­டிய வாக­னம் ஒன்றை எல்­லைப் பகு­தி­யில் ஓட்­டிச் சென்­றி­ருக்­கி­றார். அந்த வாக­னத்­தில் இரண்டு இந்­தி­யர்­கள் இருந்­த­னர். அதில் உணவு, தண்­ணீ­ரைக் கொண்ட பெட்­டி­களும் இருந்­தன.

கனடாவின் மோசமான குளிரில் பட்டேல் குடும்பத்தார் கால்நடையாகச் சென்றது குறித்து கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.