மலேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

மலேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

1 mins read
cb4f4292-3174-4ed2-aa19-f6e949d52cb8
சிலாங்கூர் மாநிலத்தில் கோம்பாக் வாகனச் சோதனைச்சாவடியில் நேற்று எடுக்கப்பட்ட படம். படம்: தி ஸ்டார் -

சீனப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மலேசியாவில் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால் அந்நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் சனிக்கிழமை (ஜனவரி 29) போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சீனப் புத்தாண்டிற்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமையும் நாளை திங்கட்கிழமையும் அதிக வாகனங்கள் சாலைகளில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் நேற்று சனிக்கிழமை ஏறக்குறைய 4.6 மில்லியன் வாகனங்கள் சென்றதாக கணிக்கப்படுகிறது.

மலேசிய சீனர்கள் தங்களது சொந்த ஊர்களில் புத்தாண்டைக் கொண்டாடுவது ஈராண்டுகளில் இதுவே முதன்முறை.

கொவிட்-19 பரவல் காரணமாக, கடந்த ஆண்டு சீனப் புத்தாண்டு காலத்தில் மலேசியாவில் மாநிலங்களுக்கு இடையே பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.