திருமணம், குழந்தைப் பிறப்பு அதிகரிக்கும் என நம்பிக்கை

திருமணம், குழந்தைப் பிறப்பு அதிகரிக்கும் என நம்பிக்கை

3 mins read
7fc9df7d-ba96-45b4-8d99-6643d67497cc
எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையை புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் ஏற்படுத்தும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி வகை வேக­மா­கப் பரவி வரு­வ­தால் சீனப் புத்­தாண்டை முன்­னிட்டு நடத்­தப்­படும் பெரிய அள­வி­லான ஒன்­று­கூ­டல்­களை ஒத்­தி­வைக்க வேண்­டும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார். கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த ஏற்­கெ­னவே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கட்­டுப்­பா­டு­க­ளு­டன் பலர் பழகி

விட்­ட­தை­யும் தங்­கள் அன்­புக்

குரி­ய­வர்­க­ளு­டன் தொடர்­பு­கொள்ள அவர்­கள் தொழில்­

நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தை­யும் அவர் சுட்­டி­னார்.

சீனப் புத்­தாண்­டின்­போது பல சுப காரி­யங்­கள் நடை­பெ­றும் என்று திரு லீ கூறி­னார். திரு­

ம­ணங்­க­ளின் எண்­ணிக்கை கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்கு முன்பு இருந்த நிலையை எட்­டி­விட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது குழந்­தைப் பிறப்­பும் சற்று சரிந்­த­தாகத் தமது சீனப் புத்­தாண்­டுச் செய்தியில்

பிர­த­மர் லீ நேற்று குறிப்­பிட்­டார்.

"எதிர்­வ­ரும் புலி ஆண்­டில் திரு­ம­ணங்­களும் குழந்­தைப் பிறப்­பும் மீண்­டும் அதி­க­ரிக்­கும் என நான் நம்­பு­கி­றேன்," என்று திரு லீ தெரி­வித்­தார்.

2020ஆம் ஆண்­டில்

குறைந்­தது ஒரு சிங்­கப்­பூ­ர­ரைக் கொண்ட திரு­ம­ணங்­கள் அடிப்­

ப­டை­யில் 19,430 திரு­ம­ணங்­கள் பதி­வா­ன­தாக அதி­கா­ர­பூர்­வப் புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­கின்­றன. 2019ஆம் ஆண்­டில் பதி­வான 22,165 திரு­ம­ணங்­க­ளை­விட இது குறைவு. ஆனால் கடந்த ஆண்­டின் முதல் ஆறு மாதங்­களில் 12,980 தம்­ப­தி­யர் இல்­லற வாழ்க்­கை­யைத் தொடங்­கி­னர்.

2020ஆம் ஆண்­டின் முதல் ஆறு மாதத்­தில் திரு­ம­ணம் செய்து­ கொண்ட 8,862 தம்­ப­தி­ய­ரை­விட இது அதி­கம்.

சிங்­கப்­பூ­ரின் குழந்தைப் பிறப்பு விகி­தம் சற்று குறைந்­தி­ருப்­ப­

தா­கப் பிர­த­மர் லீ கூறி­னார். ஆனால் பயந்த அள­வுக்கு குழந்தைப் பிறப்பு எண்­ணிக்கை வீழ்ச்சி அடை­ய­வில்லை என்று அவர் தெரி­வித்­தார்.

கடந்த ஆண்டு சிங்­கப்­பூ­ரில் 38,651 குழந்­தை­கள் பிறந்­தன. அவற்­றில் வெளி­நாட்­ட­வ­ருக்­குப் பிறந்த குழந்­தை­களும் அடங்­கும். 2020ஆம் ஆண்­டில் 38,590 குழந்­தை­களும் 2019ஆம் ஆண்­டில் 39,279 குழந்­தை­களும் பிறந்­தன.

"கொவிட்-19 நெருக்­க­டி­நிலை இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும் குடும்­பத்­தின் புது வர­வுக்­கா­கப் பெற்­றோ­ரும் தாத்தா, பாட்­டி­மார்­களும் வழி­மேல் விழி­வைத்து காத்துக்கொண்­டி­ருப்­பர். புதி­தா­கப் பிறக்­கும் குழந்தை குடும்­பத்தை மகிழ்ச்­சி­யின் உச்­சத்­துக்கே கொண்டு செல்­லும். எதிர்­கா­லம் ஒளி­ம­ய­மா­ன­தாக இருக்­கும் என்ற நம்­பிக்­கையை அந்த இளம்­பிஞ்சு அனைவருக்கும் ஏற்­ப­டுத்­தும்," என்­றார் பிர­த­மர் லீ.

திரு­ம­ண பந்­தத்­தில் இணைந்து, குழந்­தை­க­ளைப் பெற்­றெ­டுத்து தங்­க­ளுக்­கென ஓர் அழ­கிய குடும்­பத்தை உரு­வாக்கிக்­கொள்ள விழை­யும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு

அர­சாங்­கம் ஆத­ரவு வழங்­கு­ம் என திரு லீ கூறி­னார்.

குழந்தை ஆத­ரவு மானி­யத்தை அவர் உதா­ர­ணம் காட்­டி­னார். இத்­திட்­டத்­தின்­கீழ் குழந்தை பிறக்­கும் நாள் அல்­லது உத்­தேசப் பிறப்பு நாள் 2020ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் 1ஆம் தேதிக்­கும் இவ்­வாண்டு செப்­டம்­பர் மாதம் 30ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட கால

கட்­டத்­தில் இருந்­தால் பெற்­றோ­ருக்கு $3,000 வழங்­கப்­படும்.

"சீனப் புத்­தாண்­டைச் சிலர் தங்­கள் குடும்­பத்­தி­ன­ரு­டன் கொண்டா­டு­வர். சிலர் குடும்­பத்­தி­னர் போல மிக நெருக்­க­மாக இருக்­கும் நண்­பர்­கள், அண்­டை­வீட்­டா­ரு­டன் இணைந்து கொண்­டா­டு­வர். குடும்­பத்­தி­ன­ரி­ட­மும் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளி­ட­மும் பாசத்­து­டன் நடந்­து­கொள்­ள­வதே சீனப் புத்­தாண்­டின் சிறப்பு அம்­ச­மா­கும்.

"நமது வாழ்­வில் நிக­ழும் மகிழ்ச்­சி­யான தரு­ணங்­களை நமது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளு­டன் பகிர்ந்து­ கொள்­கி­றோம். அதேபோல சிர­ம­மிக்க கால­கட்­டங்­களில் ஆத­ர­வுக்­கும் ஆறு­த­லுக்­கும் அவர்­களை நாம் நாடு­கி­றோம்," என்­றார்

பிர­த­மர் லீ.