தென்தாய்லாந்தின் யாலா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த 13 குண்டுவெடிப்புகள் காரணமாகக் குறைந்தது ஒருவர் காயமடைந்தார்.
மளிகைக் கடைகளுக்கு வெளியில் உள்ள சாலையோரங்
களிலும் கடைகளிலும் சந்தை
யிலும் விலங்கியல் மருத்துவமனையிலும் கார் பழுதுபார்ப்புப்
பட்டறையிலும் வெடிகுண்டுகள் வெடித்ததாக தாய்லாந்துக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறைந்தது மூன்று வெடி
குண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
குண்டுவெடிப்புகள் பெரிய அளவில் இல்லை என்றும் சேதம், மரணம் விளைவிப்பதற்குப் பதிலாக அச்சுறுத்தவும் அமைதியைச் சீர்குலைக்கவும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கால்துறை உயர் அதிகாரிகள் கூறினர்.
தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
தென்தாய்லாந்தில் 2004ஆம் ஆண்டிலிருந்து ராணுவத்துக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான மோதல் காரணமாக 7,300க்கும் அதிகமானோர் உயிர்இழந்துவிட்டனர்.
இதற்கிடையே, தாய்லாந்தின் நரதிவாட் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இருவரை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட இருவர் அங்குள்ள வீட்டில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்ததும் ராணுவ அதிகாரிகளும் காவல்துறையினரும் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.
வீட்டிற்குள் இருந்த இருவரும் சரணடைய மறுத்ததை அடுத்து, அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.
இதில் தொண்டூழியப் படையைச் சேர்ந்த ஒருவர் காயமுற்றார். சந்தேகப் பேர்வழிகள் இருவரும்
சுட்டுக்கொல்லப்பட்டனர்.