புதுப்பிப்பு வேலை புகார்கள் 2021ல் 50% அதிகரிப்பு

புதுப்பிப்பு வேலை புகார்கள் 2021ல் 50% அதிகரிப்பு

2 mins read

வீடு­களில் புதுப்­பிப்பு வேலை­களை மேற்­கொள்­ளும் ஒப்­பந்­தக்­கா­ரர்­களுக்கு எதி­ரான புகார்­கள் சென்ற ஆண்­டில் சுமார் பாதி அளவுக்கு அதி­க­ரித்­தன.

அந்­தப் புகார்­களில் கிட்­டத்­தட்ட பாதிப் புகார்­கள் வேலை­களைக் குறித்த நேரத்­தில் முடித்து கொடுக்­க­வில்லை என்றும் வேலை சரி­யில்லை என்றும் தெரி­வித்­தன.

இந்­தத் தொழில்­து­றை­யைப் பொறுத்­த­வரை, சென்ற ஆண்­டில் 1,300 புகார்­கள் தாக்­க­லா­ன­தாக சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கம் (கேஸ்) தெரி­வித்­தது.

இந்த எண்­ணிக்கை 2020ல் 869 ஆக இருந்­தது. கொவிட்-19 கார­ண­மாக விதிக்­கப்­பட்ட எல்லை கட்­டுப்­பா­டு­க­ளின் விளை­வாக கச்சாப்பொருள்­கள் சரி­வர கிடைக்­க­வில்லை. ஊழி­யர்­கள் பற்­றாக்­குறை­யும் நீடித்­தது.

அதே­வே­ளை­யில், சென்ற ஆண்டில் வீட்டு சொத்துச் சந்தை­யில் நில­விய புதுப்­பிப்பு வேலை­களுக்­கான தேவை­யும் இதற்­குக் கார­ணம் என்று கேஸ் அமைப்பு தெரி­வித்­தது.

இந்த அமைப்பு நேற்று தனது வரு­டாந்­திர பய­னீட்­டா­ளர் புகார் புள்­ளி­வி­வ­ரங்­களை அறி­வித்­தது.

பய­ணம், மருத்­து­வம், மருத்­துவப் பய­னீட்டுத் தொழில்­து­றை­க­ளைப் பொறுத்­த­வரை புகார்­க­ளின் எண்­ணிக்கை கணி­ச­மான அள­வுக்கு குறைந்து இருக்­கிறது.

பய­ணத் துறை தொடர்­பான புகார்­கள் சென்ற ஆண்­டில் 673 ஆகக் குறைந்­தன. இந்த எண்­ணிக்கை 2020ல் 1,800 ஆக இருந்­தது. கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக ரத்­தா­கி­விட்ட அல்­லது ஒத்திவைக்­கப்­பட்ட பய­ணங்­க­ளுக்­கான தொகையைத் திரும்­பப் பெறு­வ­தன் தொடர்­பில் அதிக புகார்கள் தாக்­க­லா­யின.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணப் பாதை விமான, பேருந்து முன்­ப­திவு தொடர்­பில் 18 புகார்­கள் வந்­தன.

மருத்­துவ, மருத்­துவப் பய­னீட்டுத் துறை­யைப் பொறுத்­த­வரை புகார்­கள் ஏறத்­தாழ 63% குறைந்­தன. கேஸ் அமைப்­புக்கு 2021ல் வந்த மொத்தப் புகார்­க­ள் 15,515. இந்த எண்­ணிக்கை 2020ல் 18,335 ஆக இருந்­தது.

தன்­னி­டம் தாக்­க­லான புகார்­களில் 2,069 அல்­லது 13 விழுக்­காட்டுப் புகார்­க­ளுக்கு இந்­தச் சங்­கம் உத­வி­யது.

அவற்­றில் 1,412 புகார்­க­ளுக்­குத் தீர்வு காணப்­பட்­டது. பய­னீட்­டாளர்­களுக்கு ரொக்­கம் உட்­பட $2 மில்­லி­யன் திரும்பக் கிடைத்­தது.

இதர 13,446 புகார்­க­ளைப் பொறுத்­த­வரை தனது நேரடி உதவி தேவைப்­ப­ட­வில்லை என்­றும் கேஸ் அமைப்பு தெரி­வித்­தது.

ஒப்­பனைத் தொழில்­து­றை­யில் தாக்­க­லான புகார்­க­ளின் எண்­ணிக்கை சென்ற ஆண்­டில் அதி­க­மாக இருந்­தது. 10ல் ஒரு புகார் இந்­தத் துறை­யைச் சேர்ந்­த­தாக இருந்­தது.

சென்ற ஆண்­டில் இணை­யக் கொள்­மு­தல்­கள் தொடர்­பில் வந்த புகார்­கள் 2,206. இது மொத்த புகார்­களில் ஏறத்­தாழ 14 விழுக்­காடு என்பது கேஸ் அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்­வே­ளை­யில், புகார்­க­ளின் தன்மை கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலைக்­குத் திரும்­பி­விட்­ட­தாக கேஸ் அமைப்­பின் தலை­வர் மெல்­வின் யோங் தெரி­வித்­தார்.

இதை வைத்துப் பார்க்­கை­யில் பய­னீட்­டா­ளர்­கள் பொருள்­களை வாங்­கும் போக்­கும் அவர்களின் பழக்­க­வ­ழக்­கங்­களும் கொரோ­னா­வுக்கு முந்திய நிலை­யில் நிலைப்­பட்டு இருக்­கிறது என்­ப­தற்­கான தொடக்க அறி­கு­றி­கள் தென்­ப­டு­கின்­றன என்­றார் அவர்.