டாக்சி கட்டணம் 8% உயரும்

டாக்சி கட்டணம் 8% உயரும்

2 mins read
fcf7a1bd-2995-4aa0-9d7e-c09a4bf4e5d2
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

சிங்­கப்­பூ­ரின் முன்­னணி டாக்சி நிறு­வ­ன­மான கம்­ஃபர்ட்­டெல்­குரோ மார்ச் 1ஆம் தேதி முதல் டாக்சி கட்­ட­ணங்­களை உயர்த்த இருப்­ப­தாக அறி­வித்துள்­ளது.

கிட்­டத்­தட்ட பத்து ஆண்­டு­களில் முதல்­மு­றை­யாக அந்­நி­று­வ­னம் கட்­டண உயர்வை அறி­வித்­துள்­ளது. இரு வாரங்­க­ளுக்கு முன்­னர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸில் வெளி­யான தக­வலை உறுதிசெய்த அந்­நி­று­வ­னம், பய­ணத் தொடக்­கக் கட்­ட­ணம் 20 காசு உய­ரும் என்று தெரி­வித்­துள்­ளது.

அதன்­படி, ஹியுண்டே i40 டாக்­சி­யின் தொடக்­கக் கட்­ட­ணம் $3.70லிருந்து $3.90க்கு உய­ர்­கிறது. அதே­போல லிமோ­கேப், மேக்­ஸி­கேப் ஆகி­ய­வற்­றின் தொடக்­கக் கட்­ட­ணம் $3.90லிருந்து $4.10ஆக அதி­க­ரிக்­கும். தூர இடை­வெளி மற்­றும் நேர அடிப்­ப­டை­யி­லான கட்­ட­ணங்­களும் உயர் ­கின்­றன.

அதன் கார­ண­மாக ஒவ்­வொரு 400 மீட்­டர் தூரத்­திற்­கு­மான இடை­வெ­ளிக் கட்­ட­ணம் 22 காசி­லி­ருந்து 24 காசாக உய­ரும். இது சாதா­ரண வகை டாக்­சி­க­ளுக்­கான கட்­டண உயர்வு. சொகுசு டாக்­சி­க­ளுக்­கான தூர இடை­வெளிக் கட்­ட­ணம் 3 காசு உய­ரும். 30 காசு­க­ளாக இருக்­கும் அக்­கட்­ட­ணம் மார்ச் 1 முதல் 33 காசு­க­ளாக அதி­க­ரிக்­கும்.

அதே­போல, சாதா­ரண வகை டாக்­சி­க­ளுக்­கான காத்­தி­ருப்பு நேரத்­தில் ஒவ்­வொரு 45 வினா­டிக்­கும் தற்­போது 22 காசு­கள் வசூ­லிக்­கப்­ப­டு­கிறது. அது இனி 24 காசு­க­ளாக உய­ரும். சொகுசு டாக்­சி­க­ளுக்­கான காத்­தி­ருப்­புக் கட்­ட­ணம் 30 காசி­லி­ருந்து 33 காசு­க­ளாக உயரும்.

புதிய கட்­ட­ணங்­க­ளின் அடிப்­

ப­டை­யில் பார்த்­தால், 10 கிலோ­மீட்­டர் தூரத்­திற்­கான உச்­ச­நே­ர­மற்ற கட்­ட­ணத்­தில் 7.7 விழுக்­காடு அல்­லது 84 காசு­கள் உயர்வு இருக்­கும். அதா­வது தற்­போ­தைய $10.98 என்­பது $11.82ஆக உய­ரம்.

இப்­போது அறி­விக்­கப்­பட்­டுள்ள கட்­டண உயர்வு இதற்கு முன்­னர் 2011ஆம் ஆண்டு அறி­விக்­கப்­பட்­ட­தைப்போல உள்­ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

பண­வீக்­கம், எரி­பொ­ருள் விலை ஆகி­ய­வற்­றின் உயர்வு கார­ண­மாக அதி­க­ரித்­துள்ள நடை­மு­றைச் செலவை ஈடு­கட்­டு­வ­தில் டாக்­சி­ ஓட்டுநர்களுக்கு உத­வ பய­ணக் கட்­ட­ணங்­கள் உயர்த்­தப்­ப­டு­வ­தாக கம்­ஃபர்ட்­டெல்­குரோ கூறி­யது.

"கொள்­ளை­நோ­யி­லி­ருந்து உல­கப் பொரு­ளி­யல் மீண்­டு­வ­ரும் நிலை­யில் எண்­ணெய் விலை­கள் உயர்வு கண்டு வரு­கின்­றன. கடந்த ஆறு மாதங்­களில் மட்­டும் எரி­பொ­ருள் விலை­ சரா­ச­ரி­யாக 10 விழுக்­காடு அதி­க­ரித்­து ­விட்­டன. இன்­னொரு பக்­கம் பண­வீக்­க­மும் உய­ர்கிறது. குறிப்­பாக, கடந்த பத்­தாண்­டு­களில் பண­வீக்க உயர்வு 12 விழுக்­காட்டை நெருங்­கி­விட்­டது," என அந்­நி­று­ வ­னம் நேற்று தெரி­வித்­தது.

கொள்­ளை­நோய் கார­ண­மாக கடந்த ஈராண்­டு­க­ளாக டாக்சி ஓட்­டு­நர்­க­ளின் வரு­மா­னம் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­ க­ளுக்கு உத­வும்­பொ­ருட்டு அர­சாங்­கம் நிவா­ர­ணத் தொகை வழங்­கி­யது. கம்­ஃபர்ட்­டெல்­குரோ நிறு­வ­னம் தனது டாக்சி ஓட்­டு­நர்­க­ளுக்கு $206.5 மில்­லி­யன் பெறு­மான வாட­கைக் கழி­வு­களை அறி­வித்­தது.

"கிட்­டத்­தட்ட பத்­தாண்­டு

­க­ளுக்­குப் பின்­னர் கட்­ட­ணங்­கள் உயர்த்­தப்­ப­டு­வ­தால், நிலை­மை­யைப் புரிந்­து­கொண்டு பய­ணி­கள் எங்­களை ஆத­ரிக்க வேண்­டும்," என கம்­ஃபர்ட்­டெல்­குரோ நிறு­வ­ன டாக்சி பிரி­வின் தலைமை நிர்­வாகி ஜேக்­சன் சியா கூறி­யுள்­ளார்.

கம்ஃபர்ட்டெல்குரோ கட்டண உயர்வை அறிவிக்கும்போது இதர நான்கு டாக்சி நிறுவனங்களும் அதனைப் பின்பற்றி கட்டண உயர்வை அறிவிக்கும். இம்முறை யும் அதேபோல நிகழக்கூடும் என்று தெரிகிறது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு மார்ச் 1 முதல் புதிய கட்டணம்: கம்ஃபர்ட்டெல்குரோ முடிவு