மக்களைப் பராமரிக்க ஜிஎஸ்டி உயர்வு உதவும்

மக்களைப் பராமரிக்க ஜிஎஸ்டி உயர்வு உதவும்

3 mins read

ஜிஎஸ்டி உயர்வு மூலம் சில குடும்­பங்­கள் ஒவ்­வோர் ஆண்­டும் கூடு­த­லா­கச் செல­வி­டும் தொகை­யைக் காட்­டி­லும் பத்து மடங்கு அதி­க­மாக இருக்­கும் அள­வுக்கு உத­வித் தொகுப்பு வகுக்­கப்­பட்டு உள்­ள­தாக நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

வரி உயர்வு கார­ண­மாக விலை­ களும் வாழ்க்­கைச் செல­வி­ன­மும் உய­ரக்­கூ­டும் என்ற கவலை எழுந்­துள்ள நிலை­யில் அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். ஜிஎஸ்டி உயர்­வின் தாக்­கத்­தைச் சமா­ளிக்க குறைந்த வரு­மா­னம், நடுத்­தர வரு­மா­னம் ஈட்­டும் குடும்­பத்­தி­ன­ருக்­கும் ஓய்­வு­பெற்­ற­வர்­க­ளுக்­கும் விரி­வான நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­றும் என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரில் விலை­கள் உயர்ந்­து­வ­ரும் அதே­நே­ரம் பண­வீக்­க­மும் அதி­க­ரித்­துள்­ளது. கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் 1.6 விழுக்­கா­டாக இருந்த பண­வீக்­கம் டிசம்­பர் மாதம் 2.1 விழுக்­காட்­டுக்கு உயர்ந்­தது. மளி­கைச் சாமான்­களும் பய­னீட்­டுக் கட்­ட­ணங்­களும் ஏற்­றம் கண்­டு­வ­ரும் நிலை­யில் 7 விழுக்­காட்­டி­லி­ருந்து 9 விழுக்­காட்­டுக்கு ஜிஎஸ்­டியை உயர்த்­தும்­போது இவை மேலும் உய­ரக்­கூ­டும் என்று சிலர் தங்­க­ளது கவ­லை­களை வெளிப்­ப­டுத்தி உள்­ள­னர். அவர்­க­ளின் கவ­லை­யைப் போக்­கும் வித­மாக திரு வோங் விளக்­கம் தந்­துள்­ளார்.

"$6 பில்­லி­யன் உதவி உத்­த­ர­வா­தத் தொகுப்பு ஜிஎஸ்டி உயர்வை எவ்­வாறு சமா­ளிக்­கும் என்­ப­தற்கு உதா­ர­ண­மாக மாதம் $5,000 ஈட்­டும், இரு பிள்­ளை­

க­ளைக் கொண்ட தம்­ப­தி­யி­னர் உத­வித்­தொ­குப்­பின்­கீழ் கிட்­டத்­தட்ட $6,500 மதிப்பிலான அனு­கூ­லன்­க­ளைப் பெறு­வர். இது அவர்­கள் ஜிஎஸ்டி உயர்­வால் ஒவ்­வோர் ஆண்­டும் கூடு­த­லா­கச் செல­வி­டும் தொகை­யைக் காட்­டி­லும் ஏறக்­கு­றைய 10 மடங்­கிற்­குச் சமம்," என்­றார் நிதி அமைச்சர்.

இந்­தத் தற்­கா­லிக உதவி நட­வ­டிக்­கை­க­ளு­டன் ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டுத் திட்­டத்தை அர­சாங்­கம் நிரந்­த­ர­மாக மேம்­ப­டுத்­தும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார். குறைந்த வரு­மான சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உத­வும் பொருட்டு 2012ஆம் ஆண்டு வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டுத் திட்­டம் அறி­மு­கம் செய்­யப்­பட்­டது.

இம்­மா­தம் 18ஆம் தேதி வரவு­ செ­ல­வுத் திட்ட அறிக்­கை­யைச் சமர்ப்­பிக்­கும்­போது உத­வி­கள் தொடர்­பான கூடு­தல் விவ­ரங்­

க­ளைத் தாம் பகிர்ந்­து­கொள்ள இருப்­ப­தாக திரு வோங் தெரி­வித்­துள்­ளார்.

"சிங்­கப்­பூர் தற்­போது முக்­கி­ய­மான திருப்­பு­மு­னை­யில் உள்­ளது. கொள்­ளை­நோய் இன்­று­வரை நம்­மி­டையே உள்­ளது. அதே­நே­ரம், வருங்­கால சிங்­கப்­பூரை வள­மாக்க கடி­ன­மா­கப் பாடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றோம்.

"மூத்த குடி­மக்­களை சிறந்­த­மு­றை­யில் பரா­ம­ரிக்­க­வும் உயர்ந்து வரும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் செல­வி­னங்­க­ளைச் சமா­ளிக்­க­வும் கூடு­தல் வரு­வாய் தேவைப்­ப­டு­கிறது. அதற்கு ஜிஎஸ்டி உயர்வு கைகொ­டுக்­கும்," என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக்­கான செலவு 2018ஆம் ஆண்டு $20.7 பில்­லி­ய­னாக இருந்­தது. இது, வரும் 2030ஆம் ஆண்­டில் $59.1 பில்­லிய­னைத் தொடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மேலும், 2030ஆம் ஆண்­டுக்­குள் மொத்த மக்­கள்­தொ­கை­யில் கால்­வா­சிப் பேர் (25%) 65 வய­தைக் கடந்த மூத்த குடி­மக்­க­ளாக இருப்­பார்­கள். தற்­போது அந்த விகி­ தம் 17.6 விழுக்­கா­டாக உள்­ளது.

ஜிஎஸ்டி உயர்வு குறித்து 2018ஆம் ஆண்டு முதன்­மு­த­லாக அறி­விக்­கப்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்­டுக்­குள் இந்த உயர்வு அறி­மு­கம் செய்­யப்­பட வேண்­டும் என்று அர­சாங்­கம் தெரி­வித்­தி­ருந்­தது.

பிர­த­மர் லீ சியன் லூங் தமது புத்­தாண்­டுச் செய்­தி­யில், கொள்­ளை­நோய் தாக்­கத்­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யலை மீட்டு, நாட்டை முன்­னோக்கி வழி­ந­டத்த வேண்­டிய அவ­சி­யம் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்டிருந்தார்.

வோங்: கூடுதல் செலவைப்போல 10 மடங்கு உதவி இருக்கும்