சிறந்த சிங்கப்பூரர் சக்திபாலன்: தன்னலமற்ற சேவைக்கு விருது

சிறந்த சிங்கப்பூரர் சக்திபாலன்: தன்னலமற்ற சேவைக்கு விருது

1 mins read
a51cb88d-e805-4764-b85f-8a0412c96d4e
அதிபர் ஹலிமா யாக்கோப்பிடமிருந்து 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 2021 சிறந்த சிங்கப்பூரர் விருது' பெறும் சக்தி பாலன், (வலது) தமது கல்லீரலின் ஒரு பகுதியைத் தானமாகப் பெற்று மறுபிறவி எடுத்த குழந்தை ரேயாவை தமது சேவைக் கரங்களில் ஏந்தி நிற்கிறார். முன்பின் தெரியாதவருக்கு உதவு வதில் முன்னுதாரண மனிதராக இவர் போற்றப்படுகிறார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ்பாவ் -
multi-img1 of 2

'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சின் 2021ஆம் ஆண்­டுக்­கான சிறந்த சிங்­கப்­பூ­ரர்' விருது சக்­தி­பா­லன் பால­தண்­டா­யு­தம், 28, என்­ப­வ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த விருதை அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று திரு சக்­தி­பா­ல­னுக்கு வழங்­கிக் கௌர­வித்­தார். தமது கல்­லீ­ர­லின் ஒரு பகு­தி­யைத் தான­மாக வழங்கி ஒரு வய­துக் குழந்­தைக்கு மறு­வாழ்வு அளித்த சக்­தி­பா­ல­னின் தன்­ன­ல­மற்ற செய­லுக்­கா­க­வும் மற்­ற­வர்­

க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மா­கத் திகழ்ந்­த­தற்­கா­க­வும் அவர் இந்த விரு­துக்­குத் தேர்ந்து எடுக்­கப்­பட்­டார்.

2020 ஜூலை­யில் தங்­க­ளு­டைய ஒரு வயது குழந்தை ரேயா­வுக்கு கல்­லீ­ர­லைத் தானம் செய்ய யாரா­வது முன்­வர முடி­யுமா என்று அதன் பெற்­றோர் சமூக ஊட­கம் ஒன்­றில் வேண்­டு­கோள் விடுத்­தி­ருந்­ததை சக்­தி­பா­லன் கவ­னித்­தார். அன்­றைய தினம் பின்­னி­ரவு 1 மணி­ய­ள­வில் குழந்­தை­யின் பெற்­றோ­ரைத் தொடர்­பு­கொண்ட அவர், தம்­மு­டைய கல்­லீ­ர­லின் ஒரு பகு­தியை தாம் முன்பின் அறிந்­தி­ராத அந்­தக் குழந்­தைக்குத் தானமாக வழங்க அப்போதே முடி­வு­செய்­தார்.

பல்­வேறு சுற்று மருத்­து­வப் பரி­சோ­த­னை­க­ளுக்­குப் பிறகு, தம்­மு­டைய கல்­லீ­ர­லின் 23 விழுக்­காட்டை குழந்தை ரேயா­வுக்கு அதே ஆண்டு செப்­டம்­பர் 30ஆம் தேதி தானமாக வழங்­கி­னார் இவர். யுபி­எஸ் பல்­

க­லைக்­க­ழக வளா­கத்­தில் நடந்த விருது விழங்­கும் நிகழ்­வின் சிறப்பு விருந்­தி­ன­ராக அதி­பர் ஹலிமா பங்­கேற்­றார்.

இறு­திச்­சுற்­றுக்­குத் தேர்­வான அனை­வ­ரும், பெரி­ய­தொரு நோக்­கத்­திற்­காக சிங்­கப்­பூ­ரர்­கள் சேவை­யாற்­றக்கூடி­ய­வர்­கள் என்­பதை உணர்த்தி இருப்பதாக அதி­பர் குறிப்­பிட்­டார். மனி­தா­பி­மா­னத்­துக்கு ஈடு இணை ஏது­மில்லை என்­பதை அவர்­கள் நிரூ­பித்­துள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.