ஓமிக்ரான் தொற்று பரவத் தொடங்கியதற்குப் பின்னர் கிட்டத்தட்ட அரை மில்லியன் பேர் கொள்ளை நோய்க்குப் பலியாகிவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெரும் சோகத்தைத் தாண்டிய சம்பவம் இது என்று நிறுவனத்தின் அதிகாரிகளுள் ஒருவரான அப்டி மகமுத் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் இறுதி வாரத்தில் ஓமிக்ரான் தொற்று பரவுவதாக உலகிற்குத் தெரிய வந்தது. அப்போது முதல் உலக அளவில் 130 மில்லியன் பேருக்கு தொற்று பரவிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆபத்து குறைவானது என்று சொல்லப்பட்டாலும் மிக விரைவாகப் பரவக்கூடியது என்பதால் ஏற்கெனவே பரவியிருந்த டெல்டா வகைக் கிருமியை ஓமிக்ரான் பின்னுக்குத் தள்ளிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் சமூக ஊடகத்தில் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய டாக்டர் மகமுத், தடுப்
பூசியின் ஆற்றலுக்கு இடையில் 500,000 உயிர்கள் பறிபோய் இருப்பதாகக் கூறினார்.
"ஓமிக்ரான் மிகவும் இலேசான பாதிப்பு தரக்கூடிய கிருமி வகை என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால், அது கண்டறியப்பட்டது முதல் அரை மில்லியன் மக்கள் மடிந்திருப்பதை அவர்கள் கவனித் தவறிவிட்டார்கள். சோகத்தைத் தாண்டிய சம்பவம் இது," என்றார் அவர்.
ஓமிக்ரான் தொற்றிலிருந்து பிஏ.1, பிஏ.2 என்னும் கிருமி வகை கள் தோன்றி இருப்பதாகத் தெரி விக்கப்பட்டபோதிலும் இந்தப் புதிய கிருமியால் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை என்றார் டாக்டர் மகமுத்.
இதற்கிடையே, ஓமிக்ரான் பரவலுக்குப் பின்னர் நிகழ்ந்த மரணங்கள் வியக்க வைப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் டாக்டர் வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார். மேலும், மொத்த மரண எண்ணிக்கை இப்போது சொல்லப்பட்டிருப்பதைக் காட்டிலும் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
"இந்த எண்ணிக்கை இதற்கு முன்னர் உச்சத்தைத் தொட்ட எண்ணிக்கைகளைக் காட்டிலும் அதிகம்.
"பல நாடுகள் இன்னும் ஓமிக்ரான் எண்ணிக்கையின் உச்சத்தைத் தொடாத நிலையிலேயே இந்த அளவுக்கு மரணம் நிகழ்ந்துள்ளது. கொள்ளைநோயின் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம் என்று கருதிக்கொண்டு இருந்தேன்.
"ஆனால் நாம் இன்னும் பாதியளவுதான் கடந்திருக்கிறோம் என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது," என்றார் அவர்.
குறிப்பாக, மரணங்கள் பல வாரங்களாக அதிகரித்த வண்ணம் இருந்ததாகக் கூறிய அந்தப் பெண்மணி, ஓமிக்ரான் வகை கிருமி ஆபத்தான ஒன்றாகத் தொடர்கிறது என்றார்.

