'குழந்தை ரேயாவுக்கு விருதைச் சமர்ப்பிக்கிறேன்'

'குழந்தை ரேயாவுக்கு விருதைச் சமர்ப்பிக்கிறேன்'

1 mins read

"ஈரல் இன்றி சிரமப்பட்டு, போராடி அதில் வெற்றிகண்ட குழந்தை ரேயாவுக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன்," என்ற திரு சக்திபாலன் 'ஆண்டின் சிறந்த சிங்கப்பூரர்' விருது தமக்குக் கிடைக்கும் என எதிர் பார்க்கவில்லை என்றும் தாம் வென்றது ஓர் இன்ப அதிர்ச்சி என்றும் கூறினார்.

"இந்த விருதும் எனது கதையும் மேலும் பலரை யும் சமூகசேவையில் ஈடுபட ஊக்குவிக்கும் என நம்புகிறேன்," என்றார் அவர். தயக்கமிருந்தாலும் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, உறுப்புதானம் அல்லது ரத்ததானத்தில் பலரும் ஈடுபடவேண்டும் என்ற தனது விருப்பத்தை தமிழ்முரசிடம் வெளிப் படுத்தினார் திரு சக்திபாலன்.

கூடுதல் செய்தி: ஆ. விஷ்ணு வர்தினி