மார்ச் 12ல் ஜோகூர் மாநிலத் தேர்தல்; இருவாரங்கள் பிரசாரம்

மார்ச் 12ல் ஜோகூர் மாநிலத் தேர்தல்; இருவாரங்கள் பிரசாரம்

2 mins read

தென்­மா­நி­ல­மான ஜோகூ­ரின் சட்­ட­மன்­றத் தேர்­தல் மார்ச் 12ஆம் தேதி நடை­பெ­றும் என்று மலே­சி­யா­வின் தேர்­தல் ஆணை­யம் அறி­வித்து உள்­ளது. வேட்­பா­ளர் நிய­மன நாள் 26ஆம் தேதி என்­றும் அது தெரி­வித்­துள்­ளது. அதன்­படி, தேர்­தல் பிர­சா­ரம் இரு வாரங்­க­ளுக்கு நடை­பெ­றும்.

ஆணை­யம் வெளி­யிட்­டுள்ள தர­வு­க­ளின்­படி, ஜோகூர் மாநி­லத்­தில் கிட்­டத்­தட்ட 2.6 மில்­லி­யன் பேர் வாக்­க­ளிக்­கத் தகு­தி­பெற்று உள்­ள­னர். மாநில சட்­ட­மன்­றம் ஜன­வரி 22ஆம் தேதி கலைக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து தேர்­தல் அறி­விக்­கப்­பட்டு உள்­ளது. அம்­னோ­வும் அதன் தேசிய முன்­ன­ணிக் கூட்­ட­ணிக் கட்­சி­களும் ஜோகூர் ஆட்­சிப் பொறுப்­பில் இருந்­தன. பெர்­சத்து கட்சி தலை­மை­யி­லான பெரிக்­காத்­தான் நேஷ­னல் எனப்­படும் தேசிய கூட்­ட­ணி­யும் இந்த அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு அளித்து வந்­தது.

56 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட சட்­ட­மன்­றத்­தில் ஆளும் கூட்­ட­ணிக்கு 29 இடங்­கள் இருந்து வந்த நிலை­யில் கெம்­பாஸ் சட்­ட­மன்­றத் தொகுதி உறுப்­பி­னர் ஒஸ்­மான் சாபி­யான் கடந்த டிசம்­பர் மாதம் கால­மா­ன­தைத் தொடர்ந்து அந்த எண்­ணிக்கை 28ஆனது. எதிர்த்

­த­ரப்பு பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யைக் காட்­டி­லும் ஓர் இடம் மட்­டும் ஆளும் தரப்­புக்கு அதி­க­மாக இருந்து வந்த நிலை­யில் சட்­ட­மன்­றம் கலைக்­கப்­பட்­டது.

நடக்­க­வி­ருக்­கும் தேர்­த­லில் தேசிய முன்­னணி, தேசிய கூட்­டணி மற்­றும் பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­டணி ஆகி­யன தனித்­

த­னி­யா­கக் களம் காணும் என்­றும் மும்­மு­னைப் போட்டி இருக்­கும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மலே­சி­யா­வில் 18 வய­து­டை­ய­வர்­கள் முதல்­மு­றை­யாக வாக்­க­ளிக்­க­வி­ருக்­கும் தேர்­த­லாக இது அமை­ய­வி­ருக்­கிறது. மலாக்கா, சர­வாக் மாநி­லத் தேர்­தல்­களை அடுத்து கடந்த ஐந்து மாதங்­களில் மலே­சி­யா­வில் நடை­பெ­ற­வி­ருக்­கும் மூன்­றா­வது மாநி­லத் தேர்­தல் இது.