சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் அஞ்சல்வழி வாக்களிக்கலாம்

சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் அஞ்சல்வழி வாக்களிக்கலாம்

1 mins read

தேர்தல் தேதியை அறிவித்த ஆணையம், அண்டைய நாடுகளில் வசிக்கும் மலேசி யர்களுக்கான தகவல் ஒன்றையும் வெளியிட்டது.

சிங்கப்பூர், தாய்லாந்து, புருணை மற்றும் இந்தோனீ

சியாவிலுள்ள கலிமந்தான் ஆகியவற்றில் வசிக்கும் மலேசி யர்கள் இதற்கு முன்னர் அஞ்சல் வழி வாக்களிக்கத் தகுதி பெறாமல் இருந்தால் இப்போது நடைபெற இருக்கும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி கோரி பிப்ரவரி 9 (நேற்று) முதல் பிப்ரவரி 18 வரை அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆணையம் அறிவித்துள்ளது. இயன்றவரை விரைவாக விண் ணப்பித்து சிரமத்தைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அது கூறியது. மேலும், முந்திய சட்டமன்றத் தின் ஐந்தாண்டு காலத்தில் குறிப்பிட்ட சில காலம் வாக்காளர்கள் மலேசியா வில் தங்கி இருந்திருக்க வேண்டும் என்ற விதியையும் ஆணையம் நேற்று தளர்த்தியது.