நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்த ரயீசா கானுக்கு $35,000 அபராதம்; பிரித்தாம் சிங் மீது விசாரணை

நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்த ரயீசா கானுக்கு $35,000 அபராதம்; பிரித்தாம் சிங் மீது விசாரணை

1 mins read
8111f3a5-c3bb-4bd7-bdc1-b0eaf573b010
முன்னாள் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினல் ரயீசா கானுக்கு $35,000 அபராதம்; எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் மீது விசாரணை நடத்தவும் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழு பரிந்துரைத்திருக்கிறது. (படம்: GOV.SG) -

நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதற்காகப் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானுக்கு $35,000 அபராதம் விதிக்குமாறு நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழு பரிந்துரை செய்திருக்கிறது.

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பிரித்தம் சிங் மீது விசாரணை நடத்தவும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.

அதோடு சிறப்புரிமைக் குழுவின் சில கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்த பாட்டாளிக் கட்சியின் துணைத் தலைவரான ஃபைஸல் மானாப் மீது குற்றவியல் விசாரணை தொடர்வது குறித்தும் பரிந்துரை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் நடந்த நாடாளுமன்ற விவாதங்களின் போது பாலியல் வன்முறைச் சம்பவம் குறித்து தாம் பொய் சொன்னதை ரயீசா கான் ஒப்புக்கொண்டார்.

அதனையடுத்து அவரை விசாரிக்க சென்ற டிசம்பர் மாதம் சிறப்புரிமைக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இன்று (பிப்ரவரி 10) அறிக்கை வெளியிடப்பட்டது.