இந்திய ஊழியர் இறந்த சம்பவம்: மருத்துவருக்கு $1,500 அபராதம்

இந்திய ஊழியர் இறந்த சம்பவம்: மருத்துவருக்கு $1,500 அபராதம்

2 mins read
ace0a66f-8ee3-48b1-9757-d3804d6c6e81
-

கவ­னக்­கு­றைவாக செயல்­பட்டு, தம் நோயா­ளி­யின் உயி­ருக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்­திய குற்­றத்­திற்­காக மருத்­து­வர் ஒரு­வ­ருக்கு $1,500 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

'சோரி­யா­சிஸ்' எனும் தோல் அழற்­சிப் பிரச்­சி­னைக்­காக மருத்­து­வர் ஹரி­தாஸ் ராம்­தாஸ், 77 (படம்), தேவை­யான பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­ளா­மல் வழங்­கிய குறிப்­பிட்ட மருந்து சவ­ரி­முத்து அருள் சேவி­யர் என்ற இந்­திய ஊழி­ய­ரி­டத்­தில் கடும் பக்க விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

கட்­டு­மான ஊழி­ய­ரா­கப் பணி­யாற்­றிய இந்­திய நாட்­ட­வ­ரான திரு சேவி­யர், சிகிச்­சைக்­குப்­பின் பூஞ்­சைத் தொற்று ஏற்­பட்­டதை அடுத்து 2014 டிசம்­பர் மாதம் உயி­ரி­ழந்­து­விட்­டார்.

கவ­னக்­கு­றைவாகச் செயல்­பட்டு, திரு சேவி­யர் உயி­ரி­ழக்­கக் கார­ண­மா­கி­விட்­ட­தா­கத் தனி­யார் மருத்­து­வ­ரான ஹரி­தாஸ்­மீது முத­லில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. பின்­னர் அக்­குற்­றச்­சாட்டு குறைக்­கப்­பட்­டது.

தமது உடல், முகம், கைகால்­களில் தடிப்பு ஏற்­பட்­டதை அடுத்து, 2014 அக்­டோ­பர்-நவம்­பர் மாதங்­களில் திரு சேவி­யர் மூன்று வெவ்­வேறு தனி­யார் மருத்­து­வர்­களை நாடி­ய­தா­கக் கூறப்­பட்­டது. மூன்று மருந்­த­கங்­களும் அவர் சோரி­யா­சிஸ் நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தைக் கண்­ட­றிந்­தன. அதற்­காக அவ­ருக்­குக் களிம்பு உள்­ளிட்ட மருந்­து­க­ளை­யும் வழங்­கின.

அப்­ப­டி­யும் அந்­நோய் குண­ம் அ­டை­யா­த­தால் அதே ஆண்டு நவம்­பர் 24ஆம் தேதி லிட்­டில் இந்­தி­யா­வில் உள்ள 'தேக்கா கிளி­னிக்'கிற்கு திரு சேவி­யர் சென்­றார்.

திரு சேவி­யர் சோரி­யா­சி­சால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தைக் கண்­ட­றிந்த டாக்­டர் ஹரி­தாஸ், அவ­ருக்கு ஊசி போட்டு, சில மாத்­தி­ரை­க­ளை­யும் தந்­தார்.

அவற்­றில் ஒன்­றான 'எம்­டி­எக்ஸ்', புற்­று­நோய்ச் சிகிச்­சை­யிலும் கடும் சோரி­யாசிசைக் குணப்­ப­டுத்­த­வும் பயன்­ப­டுத்­தப்­படு­கிறது. அத­னால் உயி­ருக்கு அச்­சு­றுத்­தல் உள்­ளிட்ட பக்­க­விளை­வு­கள் ஏற்­பட வாய்ப்­புள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கிறது.

சிறு­நீ­ர­கப் பிரச்­சினை இருப்­போ­ருக்­குத் தீவிர எச்­ச­ரிக்­கை­யுடன் அம்­ம­ருந்து கொடுக்­கப்­பட வேண்­டும்.

ஆனால், திரு சேவி­யரை முறை­யான பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்த டாக்­டர் ஹரி­தாஸ் ஏற்­பாடு செய்­ய­வில்லை என்­றும் அத­னால் அவ­ருக்கு ஏற்­கெ­னவே சிறு­நீ­ர­கப் பிரச்­சினை இருந்­த­தைக் கண்­ட­றி­யத் தவ­றி­விட்­டார் என்­றும் கூறப்­பட்­டது.