நாடாளுமன்ற நாயகர்: சிறப்புரிமைக் குழு அறிக்கையை அரசியலாக்கும் முயற்சி வருத்தம் தருகிறது

முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் விவகாரம் தொடர்பாக சிறப்புரிமைகள் குழு வெளியிட்ட அறிக்கையின் தகவல்கள், எல்லாரும் பார்க்கக்கூடிய உண்மையான சான்றுகளை அடிப்படையாகக் கொண்டவை என்று மன்ற நாயகர் டான் சுவான்-ஜின் கூறியுள்ளார்.

திருவாட்டி ரயீசா நாடாளுமன்றத்தில் பொய்சொன்னது பற்றி மன்ற சிறப்புரிமைகள் குழு கண்டறிந்த தகவல்கள் பற்றியும் அதன் பரிந்துரைகள் பற்றியும் அடுத்த வாரம் மன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்கப்படவுள்ளது.

பின்னர் அது குறித்து மன்றம் முடிவு எடுக்க உள்ளது.

அதற்கு முன்னரே இந்த விவகாரத்தை அரசியல் ஆக்கும் முயற்சிகள் 'வருத்தம் தருவதாக' திரு டான் குறிப்பிட்டார்.

இது குறித்து நாடாளுமன்ற நாயகர் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 11) அன்று அறிக்கை விடுத்தார்.

எட்டு பேர் அடங்கிய சிறப்புரிமைகள் குழுவுக்கு திரு டான் தலைமை தாங்குகிறார்.

பாட்டாளிக் கட்சியில் இருந்த முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் மன்றத்தில் பொய் கூறியதற்காக அவருக்கு $35,000 அபராதாம் விதிக்கவேண்டும் என்று நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு நேற்று கூறியிருந்தது.

அத்துடன் திரு பிரித்தம் சிங், திரு ஃபைசல் மனாப் ஆகியோர் மீது கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த விவகாரத்தை அரசாங்க வழக்குரைஞரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதன் அறிக்கை பரிந்துரைத்தது.

இந்த நிகழ்வுகளை 'பெரும் கவலையுடன் கருத்தில் எடுத்துக் கொள்வதாகப்' பாட்டாளிக் கட்சி வெள்ளிக்கிழமை அன்று காலையில் தெரிவித்தது.

பாட்டாளிக் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக. கடைசியாக 1980களில் குற்றவியல் நடவடிக்கை கொண்டுவரப்பட்டது என்றும் அக்கட்சி குறிப்பிட்டது.

அதற்கு தமது அறிக்கையில் திரு டான் பதில் அளித்தார்.

சிறப்புரிமைகள் குழுவின் பரிந்துரைகளுக்கும் திரு பிரித்தம், திரு ஃபைசல் இருவரின் அரசியல் பணிக்கும் தொடர்பு உள்ளது என்று பாட்டாளிக் கட்சியின் அறிக்கை கோடிகாட்டுவதாக திரு டான் கூறினார்.

அது ஜனநாயக சமூகத்தை உருவாக்கும் பணியை பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார்.

இரண்டு நாடாமுன்ற உறுப்பினர்களின் நடந்துகொண்ட விதத்தை குழு ஆராய்ந்ததாகவும் அதில் குற்றவியல் சட்டம் மீறப்பட்ட சாத்தியம் இருப்பதாகவும் திரு டான் கூறினார்.

பாலியல் வன்முறைக்கு ஆளான ஒருவருடன் போலிஸ் நிலையத்துக்குப் போனதாகவும் அங்கு அதிகாரிகள் அந்த புகாரை முறையாகக் கையாளவில்லை என்றும் திருவாட்டி ரயீசா முதன்முதலில் ஆகஸ்ட் 3ஆம் தேதி மன்றத்தில் பொய் சொன்னார்.

அந்தப் பொய்யைத் தொடரும்படி திரு பிரித்தம் அவருக்கு வழிகாட்டியதாக திரு டான் கூறினார்.

திருவாட்டி ரயீசா அக்டோபர் 4 அன்று மீண்டும் அதே பொய்யை மன்றத்தில் சொன்னார். பின்னர் தாம் கூறியது பொய் என்று நவம்பர் 1ம் தேதி ஒப்புக்கொண்ட அவர், நவம்பர் 30ம் தேதி பதவி விலகினார்

"கண்டறியப்பட்ட இந்தத் தகவல்களின் அடிப்படையில் திரு பிரித்தம் மீதும் திரு ஃபைசல் மீதும் நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் தான் தண்டனையை விதிப்பதைவிட, அரசாங்க வழக்கறிஞரிடம் இந்த விவகாரத்தை ஒப்படைப்பது பற்றி மன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைத்தது," என்றார் திரு டான்.

அரசாங்க வழக்கறிஞர் இந்த விவகாரத்தை ஆராய இது வழி வகுக்கும் என்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டால் நீதிமன்றத்தில் தங்களைத் தற்காத்துக்கொண்டு வாதிட திரு பிரித்தமுக்கும் திரு ஃபைசலுக்கும் முழு வாய்ப்பு கிடைக்கும் என்றும் திரு டான் குறிப்பிட்டார்.

அவ்வாறு இருவர் மீது குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டால், நீதிமன்றம் அது குறித்த இறுதித் தீர்ப்பளிக்கும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!