உற்பத்தித்திறன், திறன் மேம்பாடு ஆகியவற்றுக்காகக் கடந்த ஆண்டில் கூடுதல் நிறுவனங்கள் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் ஆதரவை நாடின. கொவிட்-19 நெருக்கடிநிலை தொடர்பான கடன்களைப் பெறும் நிறுவனங்
களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும் இந்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 நெருக்கடிநிலையைச் சமாளிக்க நிறுவனங்
களுக்கு அரசாங்கம் தொடர்ந்து உதவும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார். அதே சமயம் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் வாய்ப்புகளை அவை பயன்டுத்திக்கொள்ள உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டு
களாக ஏற்பட்ட பின்னடைவை ஈடுசெய்ய என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் அனைத்துலக மயமாக்கல் முயற்சிகள் தீவிரப்
படுத்தப்படும் என்று அமைச்சர் கான் கூறினார்.
கொவிட்-19 நெருக்கடிநிலை தொடர்பான கடன் திட்டங்களின்கீழ் கடந்த ஆண்டு 12,600 நிறு
வனங்களுக்கு $8.6 பில்லியன் கடன் வழங்க என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தேவையான ஏற்பாடுகளைச் செய்தது.
2020ஆம் ஆண்டில் 21,000 நிறுவனங்களுக்கு $18 பில்லியன் பெறுமானமுள்ள கடன்கள் வழங்கப்பட்டன.
ஆக அதிக ஆதரவு பெற்ற துறைகளில் மொத்த வர்த்தகம், கட்டுமானம், உற்பத்தி, நிபுணத்துவச் சேவைகள், சில்லறை வர்த்தகம் ஆகியவை அடங்கும். சிறிய வர்த்தகங்களுக்கு ஆக அதிகமான உதவி கிடைத்தது. கடந்த ஆண்டு மேலும் பல துறைகள் மீண்டு வந்ததை அடுத்து, ஆணை பெற்ற கழகமான என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் உதவி தேவைப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துஇருப்பதாக அதன் தலைமை நிர்வாகி பிங் சியோங் பூன் கூறினார்.
சில கடன்கள் பல ஆண்டு
களுக்கு வழங்கப்படும் என்பதால் 2020ஆம் ஆண்டில் நிதி உதவி பெற்ற சில நிறுவனங்களுக்கு இவ்வாண்டு கடன் கேட்டு மீண்டும் விண்ணப்பிக்கும் தேவை இல்லாமல் போனதாக அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 நெருக்கடி
நிலைக்கு முன்பு வழங்கப்பட்ட கடன்களைவிட கடந்த ஆண்டில் கூடுதல் கடன்கள் வழங்கப்பட்டதாக திரு பிங் கூறினார்.
கடந்த ஆண்டு, ஒட்டுமொத்த அடிப்படையில், வர்த்தகம் உருமாறவும் வளர்ச்சி அடையவும் 22,100 நிறுவனங்களுக்கு என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஆதரவு வழங்கியது.
கடந்த ஆண்டு புத்தாக்கம் தொடர்பான திட்டங்களை 600 நிறுவனங்கள் தொடங்கின. 2020ஆம் ஆண்டிலும் 600 நிறு
வனங்கள் இத்திட்டங்களில் ஈடுபடத் தொடங்கின. 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 550ஆக பதிவானது.
கொவிட்-19 நெருக்கடி
நிலைக்கு முன்பிருந்த நிலையைப் போல அனைத்துலகமயமாக்கல் திட்டங்களில் ஈடுபடும் நிறு
வனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு தொடர்ந்து குறைவாக இருந்தது.
2019ஆம் ஆண்டில் 2,600 நிறுவனங்கள் அனைத்துலக
மயமாக்கல் முயற்சியில் ஈடுட்டன.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு சரிவு கண்டது. கடந்த ஆண்டு அனைத்துலகமயமாக்கல் முயற்சியில் மொத்தம் 1,600 நிறு
வனங்கள் ஈடுபட்டன.
இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெற சிங்கப்பூர் வர்த்தகங்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் கான் கூறினார்.
"நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உலகப் பொருளியல் மீட்சி அடையும்போது நம்மால் உடனே வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்," என்றார் திரு கான். அனைத்துலகமயமாக்கல் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து முக்கியமாக இருப்பதால் அதைத் தீவிரப்படுத்தும் முயற்சிகள் முடுக்கிவிடப்படும் என்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் பீட்டர் ஓங் தெரிவித்தார்.
"கொவிட்-19 நெருக்கடி
நிலைக்கு முன்பு இருந்த உலகளாவிய வளர்ச்சி திரும்பும்போது உள்ளூர் நிறுவனங்களுக்குப் பல நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். நமது நிறுவனங்கள் அளிக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு ஏற்றாற்போல் நிறுவனங்களுடனான ஈடுபாட்டு நடவடிக்கைகளை நாம் சரிசெய்ய வேண்டும்," என்றார் திரு ஓங். உதாரணத்துக்கு, வெளிநாடுகளில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு அவற்றின் சந்தைப்படுத்துதல் உத்திகள் தொடர்பாக அமைப்பு உதவி செய்யும். பிரதான நகரங்களுக்கு அப்பால் மற்ற இடங்களிலும் வர்த்தகம் செய்ய நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
வாய்ப்புகளைப் பொறுத்து, புதிய இடங்களில் வர்த்தகம் செய்ய நிறுவனங்களுக்கு உதவி வழங்கப்படும்.
தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகியவற்றில் உள்ள மின்னிலக்க, உள்கட்டமைப்புத் தீர்வு சந்தை
களிலும் அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றில் உள்ள பசுமைப் பொருளியல், தளவாடத் துறை சந்தைகளிலும் நுழைய உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவி வழங்கப்படும். புத்தாக்கத்துக்கும் புதிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றார் திரு ஓங். நிதி உதவி பெற 2,300 புதிய தொழில்நுட்ப நிறு
வனங்களுக்கு அமைப்பு கடந்த ஆண்டு உதவியதாக திரு ஓங் கூறினார்.

