'கொவிட்-19 மோசமான கட்டம் இவ்வாண்டு ஓயலாம்'

'கொவிட்-19 மோசமான கட்டம் இவ்வாண்டு ஓயலாம்'

2 mins read

உல­கில் 70 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டால் கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வ­லின் மோச­மான கட்­டம் இவ்­வாண்டு முடி­வுக்கு வர­லாம் என்று உல­கச் சுகா­தார நிறு­வ­னத்­தின் தலை­வர் டெட்­ரொஸ் அதனோம் கேபி­ரி­ய­சுஸ் கூறி­யுள்­ளார்.

"கொள்­ளை­நோய்ப் பர­வ­லின் மோச­மான கட்­டம் இவ்­வாண்டு ஓயும் என்று எதிர்­பார்க்­கி­றோம், அதற்கு இவ்­வாண்டு ஜூன், ஜூலை மாதங்­க­ளுக்­குள் 70 விழுக்­காடு மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டி­ருக்­க­வேண்­டும்," என்று திரு டெட்­ரோஸ் தென்­னாப்­பி­ரிக்­கா­வில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் சொன்­னார்.

"இவ்­வாறு செய்­தால் கொள்ளை­நோய்ப் பர­வ­லின் மோச­மான கட்­டம் ஒரு முடி­வுக்கு வரும், இதுவே எங்­கள் எதிர்­பார்ப்பு. இது நமது கையில் இருக்­கிறது. இது நிகழ்­வான சாத்­தி­யம் மட்­டும் இல்லை. இதைச் செய்து காட்­ட­மு­டி­யும்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

முதன்­மு­றை­யாக ஆப்­பி­ரிக்க கண்­டத்­தில் 'எம்­ஆர்­என்ஏ' ரக தடுப்­பூ­சி­கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. 'மொடர்னா' நிறு­வ­னத்­தின் செயல்­மு­றை­க­ளைக் கொண்டு இந்­தத் தடுப்­பூ­சி­கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. அவற்­றைத் தயா­ரிக்­கும் 'ஆஃப்ரி­ஜன் பயோ­ல­ஜிக்ஸ் அண்ட் வேக்­சீன்ஸ்' நிறு­வ­னத்­திற்­குச் சென்­ற­போது திரு டெட்­ரோஸ் பேசி­னார்.

"பயன்­ப­டுத்­தப்­படும் சூழ­லுக்கு இந்­தத் தடுப்­பூசி உகந்­த­தாக அமைவதுடன் இதைப் பாது­காப்­பாக வைப்­ப­தில் சிக்­கல்­கள் அதி­கம் இல்­லா­த­து­டன் இதன் விலை­யும் குறைவு," என்று திரு டெட்­ரோஸ் சுட்­டி­னார்.

இந்தத் தடுப்பூசியை வரும் நவம்பர் மாதத்திற்குள் மருத்துவச் சோதனைகளுக்கு உட்படுத்தலாம். இதைப் பயன்படுத்த 2024ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்­மு­றை­யாக செயல்­ப­டுத்­தப்­படும் இந்­தத் தடுப்­பூ­சித் திட்­டத்தை 'ஆஃப்ரி­ஜன்' நிறு­வ­னம் ஏற்று நடத்­து­கிறது. உலகச் சுகா­தார நிறு­வ­ன­மும் கொவேக்ஸ் திட்­ட­மும் இதற்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றன.

ஆப்­பி­ரிக்­கா­வில் 11 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. உல­கில் இங்கு­தான் ஆகக் குறை­வா­னோ­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டி­ருக்­கிறது.

உல­கின் 70 விழுக்­காடு மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் இலக்கை அடைய ஆப்­பி­ரிக்­கா­வில் தற்­போது இ­ருப்­ப­தைக் காட்­டி­லும் தடுப்­பூசி போடும் வேகம் ஆறு மடங்­கா­க­வேண்­டும் என்று உலகச் சுகாதா நிறு­வ­னத்­தின் ஆப்­பி­ரிக்க கண்­டத்­திற்­கான பிரிவு சென்ற வாரம் கூறி­யது.