உக்ரேன் வான்வெளியைத் தவிர்க்கும் விமானங்கள்; பேச்சு நடத்த வரும்படி ரஷ்யாவிற்கு அழைப்பு

உக்ரேன் வான்வெளியைத் தவிர்க்கும் விமானங்கள்; பேச்சு நடத்த வரும்படி ரஷ்யாவிற்கு அழைப்பு

2 mins read
aaef53db-fc12-4e22-8124-13616656e982
லெனின்கிராட் பகுதியில் பீரங்கி வாகனங்களுடன் ரஷ்ய ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டதைக் காட்டும் இப்படத்தை அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு வெளியிட்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

உக்ரேன்மீது ரஷ்யா எந்த நேரத்­தி­லும் தாக்­கக்­கூ­டும் என அமெ­ரிக்கா எச்­ச­ரித்­துள்­ள­தைத் தொடர்ந்து, கூடு­த­லான விமா­னங்­கள் உக்­ரேன் வான்­வெ­ளி­யில் பறப்­ப­தைத் தவிர்க்­கக்­கூடும் எனத் தெரி­கிறது.

உக்­ரே­னுக்­கும் அந்­நாட்­டின் வான்­வெளி வழி­யா­க­வும் விமா­னச் சேவை­களை இயக்­கு­வதை நிறுத்­த­வுள்­ள­தாக நெதர்­லாந்­தைச் சேர்ந்த கேஎல்­எம் விமான நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. அதே­போல், உக்­ரே­னுக்கு விமா­னச் சேவை­க­ளைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைப்­பது பற்­றிப் பரி­சீ­லித்து வரு­வ­தாக ஜெர்­ம­னி­யின் லுஃப்தான்சா நிறு­வ­னம் கூறி­யி­ருக்­கிறது.

லண்­ட­னுக்­கும் ஆசி­யா­வுக்­கும் இடையே நேற்று பறந்த பிரிட்­டிஷ் ஏர்­வேஸ் விமா­னங்­கள் உக்­ரேன் வான்­வெ­ளி­யைத் தவிர்த்­த­தா­கத் தெரி­கிறது என்று ராய்ட்­டர்ஸ் செய்தி குறிப்பிட்டது.

உக்­ரேன் வான்­வெ­ளி­யைத் தவிர்க்­கும் பட்­சத்­தில் அதன் அண்டை நாடு­களில் இருந்து புறப்­படும் விமா­னங்­கள் வழக்­கத்­தை­விட கூடு­தல் தொலை­வும் நேர­மும் பறக்க வேண்டி­ இருக்­கும். இருப்பினும், அதற்­கான செலவு பெரி­தும் அதி­க­ரிக்­காது என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, எல்­லை­யில் பதற்­ற­நிலை அதி­க­ரித்து வரு­வது தொடர்­பில் பேச்­சு­வார்த்தை நடத்த வரும்­படி ரஷ்­யா­விற்­கும் முக்­கிய ஐரோப்­பி­யப் பாது­காப்­புக் குழு உறுப்­பி­னர்­க­ளுக்­கும் உக்­ரேன் அழைப்பு விடுத்­துள்­ளது.

எல்­லை­யில் படை­க­ளைக் குவித்து வரு­வது குறித்து விளக்­கம் அளிக்­கும்­படி முறை­யாக விடுக்­கப்­பட்ட வேண்­டு­கோள்­க­ளுக்கு ரஷ்யா செவி­சாய்க்­க­வில்லை என்று உக்­ரேன் வெளி­யு­றவு அமைச்­சர் டிமிட்ரோ குலேபா தெரி­வித்­தார்.

இத­னை­ய­டுத்து, அடுத்த 48 மணி நேரத்­திற்­குள் சந்தித்து, ரஷ்யா தனது திட்­டங்­கள் குறித்து வெளிப்­ப­டை­யா­கக் கூறும்­படி வேண்டு­கோள் விடுத்­துள்­ள­தாக அவர் கூறி­னார்.

உக்­ரேன் எல்­லை­களை ஒட்டி ஏறக்­கு­றைய 100,000 படை­வீ­ரர்­க­ளைக் குவித்­தி­ருந்­தா­லும் உக்­ரேன்­மீது போர் தொடுக்­கும் திட்­ட­மே­தும் தனக்கு இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுத்து வரு­கிறது.

ஆனால், எந்த நேரத்­தி­லும் ரஷ்யா வான்­வ­ழி­யாக உக்­ரேன்­மீது தாக்­கு­தல் நடத்­த­லாம் என்று அமெ­ரிக்கா எச்­ச­ரித்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து, சிங்­கப்­பூர், அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, பெல்­ஜி­யம், பிரிட்­டன், பல்­கே­ரியா, கனடா, எஸ்­டோ­னியா, ஜெர்­மனி, அயர்­லாந்து, இஸ்­ரேல், இத்­தாலி, ஜப்­பான், லித்­து­வே­னியா, லக்­சம்­பர்க், நெதர்­லாந்து, நார்வே, சவூதி ஆரே­பியா, ஸ்லோ­வே­னியா, ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­கள் ஆகிய நாடு­கள் உக்­ரே­னில் உள்ள தங்­கள் குடி­மக்­கள் அந்­நாட்­டை­விட்டு உட­ன­டி­யாக வெளி­யே­றும்­படி அறி­வு­றுத்தி வரு­கின்­றன.

உக்­ரே­னில் உள்ள சிங்­கப்­பூ­ரர்­கள் முடிந்த அள­விற்கு விரை­வாக அந்­நாட்­டை­விட்டு வெளி­யே­றும்­படி வெளி­யு­றவு அமைச்சு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.