திடலிலேயே மயங்கி விழுந்து தமிழகக் காற்பந்து வீரர் மரணம்

திடலிலேயே மயங்கி விழுந்து தமிழகக் காற்பந்து வீரர் மரணம்

1 mins read
50086550-00e8-4ead-958e-d5307f273a26
-

தமி­ழக ரயில்வே அணிக்­காக விளை­யாடி வந்த காற்­பந்து வீரர் ஒரு­வர் பயிற்­சி­யின்­போது திட­லி­லேயே மயங்கி விழுந்த சம்­ப­வம் சென்­னை­யில் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­தது.

திருச்சி மாவட்­டம், முசி­றி­யைச் சேர்ந்த அமிர்­த­ராஜா, 45 (படம்). கல்­லூரி­யில் படித்­த­போது மாவட்ட, மாநில அள­வி­லான காற்­பந்­துப் போட்­டி­களில் சிறந்து விளங்­கி­னார். இதையடுத்து, விளை­யாட்டு வீரர்­களுக்­கான ஒதுக்­கீட்டடின்கீழ் சென்­னை­யில் உள்ள ரயில் வண்டித் தொழிற்­சா­லை­யில் (ஐசி­எஃப்) இவ­ருக்கு வேலை கிடைத்­தது.

அங்­கும் காற்­பந்து விளை­யாட்­டில் சிறப்­பா­கச் செயல்­பட்ட இவர், பல பதக்­கங்­க­ளை­யும் கிண்­ணங்­களை­யும் வென்­றுள்­ளார். ஜெர்­மனி­யில் நடந்த உலக ரயில்வே அணி­களுக்கு இடை­யி­லான போட்­டி­களில் இந்­திய ரயில்வே அணி சார்­பா­க­வும் இவர் விளை­யா­டி­யுள்­ளார். ரயில்வே ஊழி­யர்­க­ளுக்­கும் இளை­யர்­க­ளுக்­கும் இவர் காற்­பந்துப் பயிற்சி வகுப்­பு­க­ளை­யும் நடத்தி வந்­தார்.

இந்­நி­லை­யில், சென்­னை­யில் உள்ள காற்­பந்­துத் திட­லில் நேற்று முன்­தி­னம் பயிற்­சி­யில் ஈடு­பட்டு இ­ருந்­த­போது திடீ­ரென மயங்­கிச் சரிந்­தார் அமிர்­த­ராஜா. இதைக் கண்­ட­தும் சக வீரர்­கள் அரு­கில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னைக்கு இவ­ரைக் கொண்டு சென்­ற­னர். ஆனால், அமிர்­த­ராஜா இறந்­து­விட்­ட­தாக மருத்­து­வர்­கள் கூறி­விட்­ட­னர். இத­னால் ரயில்வே ஊழி­யர்­களும் சக விளை­யாட்­டா­ளர்­களும் இவ­ரி­டம் பெயிற்சி பெற்­ற­வர்­களும் சோகத்­தில் ஆழ்ந்­த­னர்.