தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேல்நிலைத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 22ல்

1 mins read
1f361ee9-783b-4a27-9819-00450507d20f
-

2021ஆம் ஆண்டு மேல்நிலைத் தேர்வுகளை(A levels) எழுதிய மாணவர்களின் முடிவுகள் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று (பிப்ரவரி 22) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும்.

மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளில் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்வர் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர்த் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகமும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்போர், தேர்வுகளைப் பெறும் நாளன்று பரிசோதனை மேற்கொண்டு, கிருமித்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே பள்ளிக்கு நேரடியாகச் செல்லமுடியும்.

உடல்நலமில்லாதோர் அல்லது கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்போர், பள்ளிக்குச் செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு உடல்நலமில்லாதோர் செவ்வாய்க்கிழமை 22ஆம் தேதி பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்குப் பிறகு மேல்நிலை தேர்வு முடிவுகளை இணையத்தின் வழி பெற்றுக்கொள்ளலாம்.

கல்வித் தெரிவுகள் பற்றி ஆலோசனை பெற விரும்பும் மாணவர்கள், தங்களது ஆசிரியர்கள் அல்லது பள்ளி வாழ்க்கைத் தொழில் வழிகாட்டல் ஆலோசகர்களை நாடலாம்.

MySkillsFuture இணையத்தளத்தில் மாணவர்கள் தங்களது கல்வித் தெரிவுகள், பயிற்சிகள், வேலைப் பாதை ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்.