குழுவின் பரிந்துரைகளை நாடாளுமன்றம் ஏற்றது

குழுவின் பரிந்துரைகளை நாடாளுமன்றம் ஏற்றது

2 mins read

சிங்­கப்­பூர் நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் பாட்­டா­ளிக் கட்­சித் தலை­மைச் செய­லா­ள­ரு­மான பிரித்­தம் சிங்கை அரசு வழக்­க­றி­ஞர் மேல் விசா­ரணை செய்ய நாடா­ளு­மன்­றம் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

நாடா­ளு­மன்­றத்­தில் ரயீசா கான் பொய்­யு­ரைத்த விவ­கா­ரம் தொடர்­பாக நான்கு மணி நேரம் விவா­தம் நடை­பெற்ற பின்­னர் வாக்­கெ­டுப்பு நடந்­தது. ஆளும் தரப்பு மற்­றும் எதிர்த்­த­ரப்பு உறுப்­பி­னர்­கள் மன­சாட்­சிப்­படி தங்­க­ளது வாக்கை அளிக்­கு­மாறு பிர­த­மர் லீ சியன் லூங்

கேட்­டுக்கொண்­டார்.

சிறப்­பு­ரி­மை­கள் குழு­வின் அறிக்கை தொடர்­பாக நடை­பெற்ற விவா­தத்­தில் பத்து உறுப்­பி­னர்­கள் பங்­­கேற்­ற­னர். அவர்­களில் மூவர் பாட்­டா­ளிக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள். இரு­வர் நிய­மன உறுப்­பி­னர்­கள்.

முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரயீசா கான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி­யும் அக்­டோ­பர் 4ஆம் தேதி­யும் மன்­றத்­தில் பொய்­யு­ரைத்­தது தொடர்­பான விவ­கா­ரத்தை விசா­ரிக்க சிறப்­பு­ரி­மை­கள் குழு அமைக்­கப்­பட்­டது. விசா­ரணை நடை­மு­றை­யின்­போது திரு சிங், பாட்­டா­ளிக் கட்­சி­யின் தலை­வர் சில்­வியா லிம் மற்­றும் துணைத் தலை­வர் ஃபைசால் மனாப் ஆகி­யோ­ரின் கடு­மை­யான நடத்­தையை குழு கண்­ட­றிந்­தது.

விவா­தத்­தில் பங்­கேற்­றுப் பேசிய இம்­மூ­வ­ரும், பொய் பேசி­யதை குழி­தோண்­டிப் புதைத்­து­வி­டு­மாறு ரயீசா கானை ஒரு­போ­தும் கேட்­டுக்­கொண்­ட­தில்லை என்று மறுத்­துப் பேசி­னர். இது தொடர்­பான இரண்டு தீர்­மா­னங்­க­ளின் மீது வாக்­கெ­டுப்பு நடை­பெற்­றது. பொய்­யு­ரைத்­த­தன் மூலம் மன்­றத்­தின் மாண்பை சீர்­

கு­லைத்த குற்­றத்தை ரயீசா கான் புரிந்­த­தாக குழு கண்­ட­றிந்­ததை மன்­றம் ஏற்­பது அத்­தீர்­மா­னங்­களில் ஒன்று. இந்­தக் குற்­றத்­திற்­காக ரயீசா கானுக்கு $35,000 அப­ரா­தம் விதிக்­க­வும் குழு பரிந்­து­ரைத்­துள்­ளது.

திரு பிரித்­தம் சிங், திரு ஃபைசால் ஆகி­யோர் மீது குற்­ற­வி­யல் விசா­ரணை நடத்­துவ­தற்­கான சாத்­தி­யத்தை ஆரா­ய­வும் குழு கேட்­டுக் கொண்­டது.

ரயீசா கான் பொய்யுரைத்த விவகாரம் மீது வாக்கெடுப்பு