மோசடிக்காரர்களிடம் $633.3 மி. இழந்தனர்

மோசடிக்காரர்களிடம் $633.3 மி. இழந்தனர்

2 mins read

சிங்­கப்­பூ­ரில் 2021ஆம் ஆண்­டில் நடந்த மோச­டி­களில் மொத்­தம் $633.3 மில்­லி­யனை பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் இழந்­துள்­ள­னர். இந்த அதிர்ச்சி தரும் தக­வலை காவல்­துறை நேற்று தெரி­வித்­தது.

2021ஆம் ஆண்­டில் நடந்த குற்றச்செ­யல்­கள் பற்­றிய புள்ளி விவ­ரங்­களை அது வெளி­யிட்­டது.

முந்­திய ஆண்­டில் ஏமாற்­றப்­பட்ட $268.4 மில்­லி­ய­னு­டன் ஒப்­பி­டு­கை­யில் கடந்த ஆண்டு ஏறக்­கு­றைய 2.5 மடங்கு அதி­க­மா­ன தொகையை பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் இழந்­துள்­ள­னர். சுமார் 90 விழுக்­காடு மோச­டி­கள் வெளி­நா­ட்டிலிருந்து செய்யப் பட்டவை. மோச­டிக்­கா­ரர்­கள் கும்­ப­லா­கச் செயல்­பட்டதுடன் நவீன தொழில்­நுட்ப வசதிகளு­டன் கை தேர்ந்­த­வர்­க­ளாகவும் இருந்­த­னர் என்று காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

"இத்­த­கைய மோச­டி­களை விசா­ரித்து நட­வ­டிக்கை எடுப்­பது சிரமம். வெளி­நாட்­டில் உள்ள அம­லாக்க அதி­கா­ரி­க­ளின் ஒத்­து­ழைப்பு தேவை. இல்­லை­யென்­றால் அவர் ­க­ளைக் கண்­டு­பி­டித்து வழக்­குத் தொடுப்­பது இய­லாத காரி­யம்.

"திரு­டப்­பட்ட பணம் வெளி­நாட்­டுக்கு மாறி­ய­தும் அதனை மீட்ப தென்பது சிரமம். இந்த மோச­டி­ க­ளைப் பற்றி அறிந்து பொது­மக்­கள் முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் இருப்­பதே சிறந்த பாது­காப்­பா­கும்," என்று காவல்­துறை கூறியது.

வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி ஏமாற்­றப்­படும் சம்­பவங்­களும் கடந்த ஆண்டு அதிகரித்தன.

2020ல் 132 வேலை மோசடி தொடர்­பான சம்­பவங்­கள் நடந்­துள்­ளன. ஆனால் கடந்த ஆண்டு இந்த எண்­ணிக்கை 4,552க்கு கூடி­யுள்­ளது.

புதுப்­புது வழி­களில் வேலை மோச­டி­கள் நடப்­ப­தா­க­வும் காவல்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

திரைப்­பட நுழை­வுச் சீட்­டு­களை வாங்கி விற்­றால் நல்ல லாபம் கிடைக்­கும் என நம்­பவைக்கும் போலி கைபேசி செய­லி­கள் மூலம் சிலர் ஏமாற்றப்பட்டதாகவும் எளி­தாக பணம் கிடைப்­ப­தாக எண்ணி சிலர் இதில் சிக்­கி­வி­டுவதாகவும் காவல்துறையினர் கூறினர்.

சிங்­கப்­பூர் காவல்­ப­டை­யின் மோசடி தடுப்­புப் பிரி­வின் துணை உதவி ஆணை­ய­ரான அய்­லீன் யாப், வேலை மோசடி அதி­க­ரிப் ­ப­தற்கு கொள்­ளை­நோ­யும் ஒரு கார­ணம் என்­றார்.

"பலர் வேலையை இழந்­த­னர். ஏரா­ள­மா­னோருக்கு குடும்­பச் செலவுகளைச் சமா­ளிக்க பகு­தி­நேர வேலை­ தேவைப்பட்டது," என்று ஊட­கங்­க­ளி­டம் அவர் தெரி­வித்­தார். கடந்த ஆண்டு மான­பங்க குற்றச்செயல்­களும் சற்று அதி கரித்­தன. 2020ல் 1,321 மான­பங்­கச் சம்­ப­வங்­கள் நடந்­துள்­ளன. ஆனால் கடந்த ஆண்டு 1,480ஆக கூடி­யது.

கடந்த ஆண்­டின் 918 மான­பங்க வழக்­கு­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு குற்­ற­வா­ளி­கள் அறி­முக மான­வர்­க­ளாக இருந்­த­னர் என்று காவல்­துறை மேலும் தெரி­வித்­தது.