சிங்கப்பூர் அரசாங்கம், மக்கள் பெருமூச்சு விடும் அளவுக்கு கொவிட்-19 கட்டுப்பாடுகளில் மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளது.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சுகாதாரப் பராமரிப்பு நடைமுறைகள், வேலையிடப் பரிசோதனை, எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்படுவதாக நேற்று கொவிட்-19 அமைச்சுகள் நிலை பணிக்குழு தெரிவித்தது.
"கடந்த இரண்டு ஆண்டு களாக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் சேர்ந்துவிட்டன," என்று ஊடகங்களிடம் கூறிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங், இவற்றை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சரியான தருணத்தில் திறந்துவிடக்கூடிய சூழ்நிலையில் சிங்கப்பூரை வைக்க முடியும் என்றார்.
சிங்கப்பூரில் இன்னமும் தொற்று அதிகரித்து காணப்படு வதால் கட்டுப்பாடுகளை விலக்கு வதற்கான நேரம் வந்துவிடவில்லை என்றார் அவர்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு நாள் தொற்று புதிய உச்சத்தை எட்டியது. மொத்தம் 19,420 தொற்றுச் சம்பவங்கள் அன்றைய தினம் பதிவாகின. அவற்றில் 19,179 சம்பவங்களில் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
"சிங்கப்பூர் மற்ற நாடுகளைப் போல ஓமிக்ரான் அலையைக் கடந்து வந்தால் அடுத்த சில வாரங்களில் எதிர்பாராத அளவுக்கு தொற்று குறைய வாய்ப்புள்ளது.
"அப்போது உள்ளூர் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் உட்பட பயணத் தடைகளை தளர்த்து வதற்கான சூழ்நிலை ஏற்படும்," என்று அமைச்சர் ஓங் தெரிவித் தார்.
இதே செய்தியாளர் கூட்டத்தில் பேசிய வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங். ஓமிக்ரான் அலை ஓய்ந்தால் துணிச்சலாக கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியும் என்றார்.
உதாரணமாக, தற்போதுள்ள ஒன்றுகூடுவோர் எண்ணிக்கையை ஐந்து முதல் எட்டு, பத்து அல்லது அதற்கும் ேமல் அதிகரிக்க முடியும் என்று அவர் கூறிஉள்ளார்.
பாதுகாப்பு நிர்வாக நடைமுறை கள் மாற்றியமைக்கப்படும்போது ஐந்து முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படுவதாக கொவிட்-19 பணிக்குழு தெரி வித்தது.
ஒன்றுகூடுவோர் எண்ணிக்கை, முகக்கவசம் அணிவது, வேலையிட விதிமுறைகள், பாதுகாப்பு இடைெவளி, ஆற்றல் வரம்பு ஆகியன அவை.
இம்மாதம் 25ஆம் தேதியில் இருந்து வீட்டு வருகையாளர்கள் எந்த நேரத்திலும் ஐவர் வரை அனுமதிக்கப்படுவர்.
வேலையிடங்களிலும் ஐவர் கொண்ட குழுக்களாக ஒன்றுகூட அனுமதி வழங்கப்படும்.
முகக்கவசம் அணிந்திருந்தால் பாதுகாப்பு இடைவெளி கட்டாய மல்ல. ஆனால் அதனை கடைப் பிடிக்க ஊக்குவிக்கப்படும்.
அதே சமயத்தில் முகக்கவசம் அணியாத நிகழ்ச்சி மற்றும் ஒன்றுகூடல்களில் ஒரு மீட்டர் பாதுகாப்பு இடைவெளி இருப்பது அவசியம்.
பொது இடங்களில் மாற்று இருக்கைகளில் உட்கார அனு மதிக்கப்படாதது, பார்பிகியூ இடங் களை மூடுவது உள்ளிட்ட இதர கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும்.
கொவிட்-19 நோயாளிகள், அவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்கள் ஆகியோருக்கான கட்டுப்பாடுகளும் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக மருத்துவமனைகளின் சுமையைக் குறைக்கும் வகையில் பொது மருத்துவர்களும் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்படுவர்.
வரும் புதன்கிழமையிலிருந்து இது நடைமுறைக்கு வருகிறது. இதன்படி மூன்று வயதுக்கு மேற் பட்ட அனைத்து கொவிட்-19 நோயாளிகளுக்கும் பொது மருத்து வர்கள் சிகிச்சை அளிக்கலாம்.
தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஏழு நாட்களுக்குப் பதிலாக ஐந்து நாட்களுக்கு உடல்நிலையைக் கண்காணிக்க கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.
இம்மாதம் 18ஆம் தேதியில் இருந்து பெரும்பாலான ஊழியர்களுக்கு வழக்கமான கட்டாய கொவிட்-19 சோதனை இருக்காது.
எளிதில் தொற்றுக்கு ஆளாகும் நபர்களுடன் பணியாற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், மூத்தோரைப் பராமரிப்பவர்கள், பாலர் பள்ளிகளில் இருப்பவர் களுக்கு கொவிட்-19 பரிசோதனை தொடரும். இம்மாதம் 21ஆம் தேதியிலிருந்து எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதை எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூருக்கு வந்தவுடன் மேற்கொள்ள வேண்டிய கொவிட்-19 சோதனைகள் அகற்றப்படுவதும் அவற்றில் ஒன்று. கத்தார், சவூதி அரேபியா, பிலிப்பீன்ஸ் உட்பட அதிக நாடுகளுக்கு விடிஎல் திட்டம் விரிவுப்படுத்தப் படுகிறது.
மேலும் விரிவான ெசய்திபக்கம் 2ல்

