'சிலம்பம்' வீராங்கனைக்கு ஆரவாரமான வரவேற்பு

'சிலம்பம்' வீராங்கனைக்கு ஆரவாரமான வரவேற்பு

1 mins read
ebd72046-aa37-4bdf-9a39-761ac82903dc
கோமதியை வரவேற்ற உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்.படம்: புதிய தலைமுறை இணையத்தளம் -

அனைத்­து­லக சிலம்­பப் போட்­டி­யில் வெற்றி பெற்ற தமி­ழக வீராங் கனைக்கு ஆர­வா­ர­மான வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

'தங்­கம்' வென்று ஊர் திரும்­பிய கோமதி, ஈரோடு ரயில் நிலை­யத்­தில் இறங்­கி­ய­தும் கர­வொலி எழுந்தது.

உற்­றார் உற­வி­னர்­கள், நண்­பர்­கள், அங்­கி­ருந்த ரயில் பய­ணி­கள், ரயில்வே காவல்­துறை, பொது மக்­கள் என அனை­வ­ரும் அவரை சூழ்ந்து உற்சாகமாக வரவேற்று சிலர் கைபேசி மூலம் அவருடன் படம் பிடித்­துக் கொண்­ட­னர்.

ஈரோடு மொடக்­கு­றிச்­சியை அடுத்­துள்ள விளக்­கேத்தி கிரா­மத்­தைச் சேர்ந்த கோமதி சிறு வய­தில் இருந்தே சிலம்­பத்தை முறைப்­படி கற்று, சுழன்று வீசு­வ­தில் தேர்ச்சி பெற்­றிருந்தார்.

இந்த நிலை­யில் இம்­மா­தம் 7ஆம் தேதி நேப்­பாள நாட்­டில் அனைத்­து­லக அள­வில் பல்­வேறு போட்­டி­கள் நடை­பெற்­றன. ஹாக்கி, காற்­பந்து, குத்­துச்­சண்டை, சிலம்­பம் உள்­ளிட்ட போட்­டி­களில் இந்­தி­யா­வைச் சேர்ந்த 70 பேர் பங்­கேற்­ற­னர். சிலம்­பம் பிரி­வில் பங்­கேற்ற கோமதி தங்­கப்­ப­தக்­கத்தை வென்று தமி­ழ­கத்­துக்குப் பெருமை சேர்த்து உள்­ளார்.

இந்­தியா, நேப்­பா­ளத்­தில் நடை­பெற்ற போட்­டி­களில் மொத்­தம் 42 தங்­கம், 17 வெள்ளி, 11 வெண்­க­லப் பதக்­கங்­களை வென்­றுள்­ளது.