‘விடிஎல்’ பயணிகள் அனுமதி பழைய நிலைக்குத் திரும்புகிறது

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யில், 'விடி­எல்' எனப்­படும் தடுப்­பூசி செலுத்­திக்­கொண்­டோ­ருக்­கான தரை­வ­ழிப் பய­ணி­கள் அனு­மதி எண்­ணிக்கை பிப்­ர­வரி 22ஆம் தேதி­யி­லி­ருந்து மீண்­டும் பழைய நிலைக்­குத் திரும்­ப­வி­ருக்­கிறது.

நேற்று முதல் இரு நாடு­க­ளுக்கு இடை­யில் கூடு­தல் பேருந்­துப் பய­ணச் சீட்­டு­க­ளின் விற்­பனை தொடங்­கியது.

வெளி­நா­டு­களில் இருந்து வரு­வோர் மூலம் சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்தொற்று எண்­ணிக்கை இப்­போது பாதிக்­கப்­ப­டாது என்ற நிலை­யில், எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­ட­தா­க­வும் தரை­வ­ழிப் பய­ணி­க­ளுக்­கான அனு­மதி எண்­ணிக்கை மீண்­டும் உயர்த்­தப்­ப­டு­வ­தா­க­வும் வர்த்­தக, தொழில் அமைச்சு தெரி­வித்­தது.

சென்ற ஆண்டு டிசம்­ப­ரில், ஓமிக்­ரான் பர­வ­லைத் தடுக்­கும் நோக்­கில், அந்த எண்­ணிக்கை தற்­கா­லி­க­மா­கப் பாதி­யா­கக் குறைக்­கப்­பட்­டது.

மேலும், பிப்­ர­வரி 21ஆம் தேதி பின்­னி­ரவு மணி 11:59இல் இருந்து, தரை­வ­ழிப் பய­ணம் மேற்­கொள்­ளும் 'விடி­எல்' பய­ணி­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­கள் மாற்­ற­ம­டை­வ­தாக கிரு­மிப் பர­வ­லைக் கையா­ளும் அமைச்­சு­கள்நிலை பணிக்­குழு அறி­வித்­தது.

சிங்­கப்­பூர் வந்து சேர்ந்­த­தும் பேருந்து முனை­யத்­தி­லேயே கண்­கா­ணிப்­பு­டன் கூடிய 'ஏஆர்டி' சோதனை மேற்­கொள்­வ­தற்­குப் பதி­லாக, இங்கு வந்த 24 மணி நேரத்­தில் அத்­த­கைய சோத­னையை அதற்­கான விரை­வுப் பரி­சோ­தனை நிலை­யங்­களில் மேற்­கொள்­ள­லாம். அதற்­குப் பதிந்­து­கொள்­வ­தற்­கான இணை­யத் தொடர்பு விவ­ரம் அவர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­படும்.

இனி, வந்த இரண்­டாம் நாளில் இருந்து ஏழாம் நாள் வரை, கண்­கா­ணிப்பு தேவை­யின்றி சொந்­த­மா­கவே 'ஏஆர்டி' சோதனை மேற்­கொள்­ளத் தேவை­யில்லை.

'விடி­எல்' பய­ணி­கள் வந்­த­வு­டன் பரி­சோதனை செய்­து­கொள்­வ­தோடு, அதன் பிறகு இங்­கி­ருந்து கிளம்­பு­வ­தற்கு முன்­னர் பரி­சோதனை செய்­து­கொண்­டால் போது­மா­னது.

புதிய நடை­மு­றை­யின் கீழ், வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போ­ரும் குறு­கிய கால அனு­மதி வைத்­தி­ருப்­போ­ரும் மட்­டுமே 'விடிஎல்' தரை­வ­ழிப் பயண அனு­ம­திக்கு விண்­ணப்­பிக்கலாம்.

நீண்­ட­கால அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போர் தடுப்­பூசி செலுத்­திக்கொண்­டோ­ருக்­கான அனு­மதி அட்­டைக்கு விண்­ணப்­பிக்­கத் தேவை­யில்லை.

இனி, சிங்­கப்­பூர் வரு­வ­தற்கு ஏழு நாள் முன்­னர் சென்­றி­ருந்த மற்ற 'விடி­எல்' பங்­கேற்பு நாடு­க­ளின் விவ­ரங்­க­ளைச் சமர்ப்­பித்­தால் போதும். இப்­போது அது 14 நாள்­க­ளாக உள்­ளது.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தொடர்ந்து மறு­ஆய்வு செய்து, படிப்­ப­டி­யாக 'விடி­எல்' திட்­டத்­தைப் பாது­காப்­பான முறை­யில் விரிவு படுத்­த­வி­ருப்­ப­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூ­ரி­லும் மலே­சி­யா­வி­லும் உள்ள பொதுச் சுகா­தார நில­வ­ரத்­து­டன் உல­க­ளா­விய நிலை­மை­யை­யும் கருத்­தில்­கொண்டு அந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தோ­னீ­சி­யா­வின் பாத்­தாம், பிந்­தான் ஆகிய இடங்­களில் இருந்து வரும், முழு­மை­யா­கத் தடுப்­பூசி செலுத்­திக்­கொண்ட பய­ணி­கள் இனி சிங்­கப்­பூர் வந்­த­தும் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்­ளத் தேவை இல்லை.

பிப்­ர­வரி 25ஆம் தேதி­யி­லி­ருந்து அது நடப்­புக்கு வரும் என்று சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­யம் நேற்று அறி­வித்­தது.

இரு இடங்­களில் இருந்­தும், தொடக்­கத்­தில் வாரத்­திற்கு 700 பய­ணி­கள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

சிங்­கப்­பூர் நேரப்­படி, பிப்­ர­வரி 22ஆம் தேதி காலை பத்து மணி­யில் இருந்து பய­ணி­கள் அதற்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!