சிங்கப்பூரில் ஏஆர்டி பரிசோதனைக் கருவிகளுக்கு தேவை அதிகரித்துள்ளதைத் அடுத்து, அரசாங்கம் தான் கையிருப்பில் வைத்திருந்த பரிசோதனைக் கருவிகளை சில்லறைக் கடைகளுக்கு அளித்திருக்கிறது.
சுகாதார அமைச்சு வியாழன் அன்று அதைத் தெரிவித்தது.
உலக அளவில் ஏஆர்டி பரிசாதனைக் கருவிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால் அல்லது சிங்கப்பூரில் திடீரென்று தேவை அதிகமானால், அதைச் சமாளிக்க பரிசோதனைக் கருவிகளை வாங்கி வைத்துள்ளதாக அமைச்சு கூறியது.
கடந்த வாரம் தனது கையிருப்பில் இருந்த ஏஆர்டி பரிசோதனைக் கருவிகளை சில்லறைக் கடைகளிடம் கொடுத்ததாக அரசாங்கம் கூறியது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் கேள்விகளுக்கு அமைச்சு அந்த பதிலை அளித்தது.
சீனப் புத்தாண்டு நேரத்தில் ஏர்ஆர்டி கருவிகளுக்கான தேவை அதிகரித்தாக செய்தி வெளியானது.
ஏர்ஆடி கருவிகள் வந்திறங்கிய உடனேயே விற்று முடிந்ததாகவும் கூடுதல் கருவிகளை வாங்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் நிறுவனங்கள் அப்போது கூறின.
சிங்கப்பூர் மருந்துக் கடைகளில் ஏஆர்டி பரிசோதனைகளின் விற்பனை கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் தொடங்கியது. அதன்முதல் இங்கு சுமார் 9 மில்லியன் ஏஆர்டி பரிசோதனைக் கருவிகள் விற்பனை ஆகியுள்ளன.


