மலேசியா: சிறாரிடையே கொவிட்-19 கிருமித்தொற்று 160% அதிகரிப்பு

மலே­சி­யா­வில் கடந்த ஒரே வாரத்­தில் 12 வய­துக்­கும் குறை­வான சிறா­ரி­டையே கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் 160% அதி­க­ரித்­த­தாக அந்­நாட்டு சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் நேற்று தெரி­வித்­தார்.

ஆண்டு தொடங்கி ஐந்­தா­வது, ஆறா­வது வாரங்­களில் குறிப்­பாக இளம் பிள்­ளை­க­ளி­டையே கொவிட்-19 கிரு­மித்­தொற்று பதி­வா­கி­ய­தில் 160% அதி­க­ரிப்பு இருந்­தது. இது அமைச்­சுக்­குக் கவலை தரும் ஒரு நிலை என்று அமைச்­சர் நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் குறிப்­பிட்­டார்.

ஐந்­தா­வது வாரத்­தில் மட்­டும் இளம் பிள்­ளை­க­ளி­டையே 6,524 கொவிட்-19 சம்­ப­வங்­கள் பதி­வாகின. ஆறா­வது வாரத்­தில் அந்த எண்­ணிக்கை கிடு­கி­டு­வென அதி­கரித்து 16,959 ஆனது. ஐந்­தா­வது வாரத்­தில் 5 வய­துக்­கும் 11 வய­துக்­கும் இடைப்­பட்ட 4,242 சிறார்­கள் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். அதே வய­துப் பிரி­வி­ன­ரி­டையே ஆறா­வது வாரத்­தில் 10,796 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

"இளம் பிள்­ளை­க­ளி­டையே பதி­வா­கும் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வதை நாம் கவ­னிக்க வேண்­டி­யுள்­ளது. மருத்­து­வ­ம­னை­களில் இப்­பிள்­ளை­கள் சேர்க்­கப்­படும் விகி­த­மும் அதி­கம்," என்­றார் அமைச்­சர் கைரி. இந்­நிலை கருதி பெற்­றோர்­கள் உடனே 5 வய­துக்­கும் 11 வய­துக்­கும் இடைப்­பட்ட தங்­க­ளின் பிள்­ளை­க­ளைத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள பதி­வு­செய்­து­கொள்­ளு­மாறு அவர் கேட்­டுக்­கொண்­டார். பள்­ளி­கள் அண்­மை­யில் திறக்­கப்­பட்­ட­தன் விளை­வாக இந்த அதி­க­ரிப்பு இருக்­க­லாம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

ஒரே வாரத்­தில் 3,000 சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­குத் கொவிட்-19 தொற்று உறுதி

மலே­சி­யா­வில் ஒரே வாரத்­தில் 3,000க்கும் மேற்­பட்ட சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்கு கொவிட்-19 இருப்­பது உறு­தி­யா­ன­தாக அந்­நாட்டு சுகா­தார தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா குறிப்­பிட்­டுள்­ளார்.

ஆண்டு தொடங்கி இது­வரை 7,702 சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி­யா­கி­யுள்ள நிலை­யில் அதில் கிட்­டத்­தட்ட பாதி பேருக்கு ஒரே வாரத்­தில் தொற்று உறு­தி­யா­னது.

இதன்­படி இம்­மா­தம் 6ஆம் தேதிக்­கும் 12ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட நாள்­களில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளி­டையே மொத்­தம் 3,343 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

கிருமி தொற்­றிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் வேலை­யிலி­ருந்து விடுப்பு பெற்­றுள்ள நிலை­யில், மருத்­து­வ­மனை நோயா­ளி­களுக்­கான சேவை­க­ளி­லும் பரா­ம­ரிப்­பி­லும் குறைந்­த­பட்ச பாதிப்­பு­கள் இருப்­ப­தற்­குத் தேவை­யான நட­வடிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­வ­தாக டாக்­டர் நூர் ஹிஷாம் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, மலே­சி­யா­வில் பதி­வா­கும் அன்­றாட கொவிட்-19 சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை, புதிய உச்­சத்தை எட்­டி­யுள்­ள­தை­யும் அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி­யன்று பதி­வான 24,599 சம்­ப­வங்­களை நேற்­றைய 27,831 சம்­ப­வங்­கள் மிஞ்­சி­விட்­டன.

இந்த எண்­ணிக்­கை­யில் தொற்­றுக்­கான அறி­கு­றி­களே இல்­லாத, அல்­லது மித­மான அறி­கு­றி­கள் உடை­ய­வர்­கள் 99.65 விழுக்­காட்­டி­னர் என்று அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!