போரிஸ் ஜான்சன்: ஐரோப்பாவில் மிகப் பெரிய போர் வெடிக்கக்கூடும்

இரண்­டாம் உல­கப் போருக்­குப் பிறகு ஐரோப்­பா­வில் தற்போது மிகப் பெரிய போர் வெடிக்­கும் அபா­யம் இருப்­ப­தாக பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன்

எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

உக்­ரேனை ரஷ்யா எந்­நே­ர­மும் தாக்கி ஆக்­கி­ர­மிக்க முயற்சி செய்­யக்­கூ­டும் என்று மேற்­கத்­திய நாடு

­க­ளின் தலை­வர்­கள் பலர் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

ரஷ்யா தாக்­கு­தல் நடத்­தி­னால் அதற்கு எதி­ரா­க மி­கக் கடு­மை­யான தடை­கள் விதிக்­கப்­படும் என்று அவர்­கள் கூறி­னர்.

இதற்­கி­டையே, போர் மூண்­டால் ரஷ்ய நிறு­வனங்­க­ளி­டையே

அமெ­ரிக்க டாலர், பிரிட்­டிஷ் பவுண்ட் ஆகி­ய­வற்­றின் புழக்­கத்தை அமெ­ரிக்­கா­வும் பிரிட்­ட­னும் நிறுத்­தும் என்று திரு போரிஸ் ஜான்­சன் தெரி­வித்­தார். அவ்­வாறு நேர்ந்­தால் ரஷ்­யா­வின் பொரு­ளி­யல் வெகு­

வா­கப் பாதிக்­கப்­படும் என்று அவர் கூறி­ய­தாக பிபிசி செய்தி நிறு­

வ­னம் தெரி­வித்­தது.

எண்­ணெய், எரி­வாயு, உலோ­கங்­கள் ஆகி­ய­வற்றை மிகப் பெரிய அள­வில் ஏற்று­மதி செய்­யும் நாடு­களில் ரஷ்­யா­வும் ஒன்று.

எனவே, ரஷ்ய நிறு­வ­னங்­க­ளி­டம் அமெ­ரிக்க டாலர் சென்றடையக்­கூ­டாது என்று தடை விதிக்­கப்­பட்­டால், ரஷ்யா கடும் பாதிப்­புக்­குள்­ளா­கும் என்று கூறப்படுகிறது. அமெ­ரிக்க டாலரை அதி­கம்

சார்ந்­தி­ருக்­கா­மல் செயல்­பட வேண்­டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமர் புட்டின் நீண்­ட­ கா­ல­மா­கவே தமது நாட்­டின் நிறு­வ­னங்­க­ளி­டம் வலியுறுத்தி வருகிறார்.

போர் தொடுக்­கும் எண்­ணத்தை ரஷ்யா கைவி­டா­விட்­டால்

லண்­டனில் முத­லீட்­டுத் தொகை­யைத் திரட்ட ரஷ்ய நிறு­வ­னங்­

க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­ப­டாது என்று பிரிட்­டன் எச்­ச­ரித்­துள்­ளது.

அதோடு லண்­ட­னில் ரஷ்ய நிறு­வ­னங்­க­ளுக்­குச் சொந்­த­மான சொத்­து­களின் விவரங்கள் வெளியிடப்படும் என்று பிரிட்­டன் மிரட்­டல் விடுத்­துள்­ளது. சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு உக்­ரே­னி­ட­மி­ருந்து கிரை­மி­யாவை ரஷ்யா கைப்­பற்­றி­யது.

ஆனால் இம்­முறை உக்­ரே­னி­ட­மி­ருந்து வேறு எந்த ஒரு பகு­தி­யை­யும் கைப்­பற்ற திட்­டம் கொண்­டி­ருக்­க­வில்லை என்று ரஷ்யா தெரி­வித்துள்ளது.

போர் தொடுக்க ரஷ்யாவை மேற்­கத்­திய நாடு­கள் தூண்­டு­வ­தா­க­வும் அதற்­காக ஐரோப்­பா­வில் பதற்­ற­நி­லையை அது ஏற்­ப­டுத்தி வரு­வ­தா­க­வும் அதிபர் புட்­டின் குற்­றம் சாட்­டி­ உள்­ளார். நேட்டோ படை ரஷ்­யா­வுக்கு எதி­ராக வீரர்­க­ளைக் குவித்து வரு­வ­தாக அதி­பர்

புட்­டின் குறை­கூ­றி­யுள்­ளார். இதற்­கி­டையே, உக்­ரே­னு­ட­னான எல்லை அரு­கில் 150,000க்கும் அதி­க­மான ரஷ்ய ராணுவ வீரர்­கள்

முகா­மிட்­டுள்­ள­னர்.

1991ஆம் ஆண்­டில் சோவி­யத் யூனி­யன் கலைந்­த­போது உக்­ரேனி­டம் இழந்த சில நிலப் பகு­தி­களை ரஷ்யா இம்­முறை கைப்­பற்­ற எண்ணம் கொண்டிருக்கக்கூடும் என்று அமெ­ரிக்கா, பிரிட்­டன், ஐரோப்­பிய ஒன்­றி­யம், நேட்டோ ஆகி­யவை அச்­சம் தெரி­வித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!