இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேலும் 56,000 வீடமைப்பு வளரச்சிக் கழக வீடுகள் மேம்
படுத்தப்பட இருக்கின்றன.
இவற்றுக்கான மேம்பாட்டுப் பணிகள் தொடங்கிவிட்டன.
இந்த வீடுகள் 1987ஆம்
ஆண்டுக்கும் 1997ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் கட்டப்பட்டவை.
அக்காலகட்டத்தில் கட்டப்பட்ட ஏறத்தாழ 230,000 வீவக வீடுகள் மேம்படுத்தப்பட உள்ளன.
மேம்பாட்டுப் பணிகளுக்கான வாக்கெடுப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி மேம்பாட்டுப் பணிகளுக்குத் தகுதி பெற்ற வீடுகளின் உரிமையாளர் களில் 75 விழுக்காட்டினர் மேம்பாட்டுப் பணிகள் வேண்டும் என்று வாக்களித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இல்ல மேம்பாட்டுத் திட்டம் 15 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
1986ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட ஏறத்தாழ 320,000 வீடுகளுக்கான மேம்பாட்டுப் பணிகள் முடியும் கட்டத்தில் இருக்கின்றன.
ஏறத்தாழ 259,100 வீடுகளுக்கான மேம்பாட்டுப் பணிகள் நிறைவுபெற்றுவிட்டன.
கிட்டத்தட்ட 55,100 வீடுகளுக்கான மேம்பாட்டுப் பணிகள் தொடர்கின்றன.
இந்நிலையில், இரண்டாம் கட்ட வீடுகளுக்கான விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இல்ல மேம்
பாட்டுப் பணிகள் துவங்கி
உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி, முதல் கட்ட வீடுகளுக்கான மேம்பாட்டுப் பணிகளுக்கு அரசாங்கம் ஏறத்தாழ $3.4 பில்லியன் செலவு செய்தது.
வீவக வீடுகளின் குடியிருப்பாளர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, பொதுவான பராமரிப்புப் பிரச்சினைகளை எதிர்கொள்வது மூப்படையும் மக்கள்தொகை தொடர்பான சவால்களைச் சமாளிப்பது ஆகியவை மேம்பாட்டுப் பணிகளின் இலக்கு.
இல்ல மேம்பாட்டுத் திட்டம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அத்தியாவசிய அம்சங்களை மேம்படுத்துவது,
விருப்பத் தேர்வு மேம்பாட்டுப் பணிகள் (குடியிருப்பாளர்களுக்கு விருப்பம் இருந்தால் செய்துகொள்ளலாம்), துடிப்புமிக்க மூத்தோருக்குத் தேவையான மேம்பாடுகள் ஆகியவை இதில் அடங்கும். சுவரில் உள்ள பிளவுகளைப் பழுதுபார்ப்பது, துணிகளைக் காய வைக்க உள்ளிழுக்கக்கூடிய உலோகச் சட்டத்தைப் பொருத்து வது, பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்து வது ஆகியவை அத்தியாவசிய அம்சங்களில் அடங்கும். இதற்கான செலவுகளை அரசாங்கம் முழுமையாக ஏற்கிறது.
வாசல் கதவு, 'கேட்'களை மாற்றுவது போன்றவை விருப்பத் தேர்வு மேம்பாட்டுப் பணிகள்
பிரிவில் உள்ள சில உதாரணங்
களாகும். இப்பணிகளுக்கான செலவுக்கு வீட்டின் வகையைப் பொறுத்து 95 விழுக்காடு வரை மானியம் வழங்கப்படும்.
மூத்தோருக்குத் தேவையான மேம்பாட்டுப் பணிகளுக்கும் அதிக மானியம் வழங்கப்படுகிறது. மூத்தோருக்குத் தேவையான கைப்பிடிகள், சரிவுப் பாதைகள், வழுக்கி விழுவதைத் தடுக்கும் கழிவறைத் தரை கற்களைப் பதிப்பது ஆகியவை இப்பிரிவின்கீழ் செய்து தரப்படும். மூத்தோருக்குத் தேவையான வசதிகள் பொருத்தப்பட்டதும் வீடு எவ்வாறு காட்சியளிக்கும் என்பதைக் காண விரும்பும் குடியிருப்பாளர்கள் Mobile@HDB செயலியை நாடலாம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி 255,500க்கும் மேற்பட்ட வீடுகள், மூத்தோருக்குத் தேவையான மேம்பாடுகளுக்கு விண்ணப்பம் செய்திருப்பதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.
இல்ல மேம்பாட்டுப் பணி
களுக்குத் தகுதி பெற்ற ஏறத்தாழ 160,200 வீடுகள் இதைத் தேர்ந்தெடுத்தன. இல்ல மேம்பாட்டுப் பணிகளுக்குத் தகுதி பெறாத 95,300 வீடுகளும் இதற்கு
விண்ணப்பித்தன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி மூத்தோருக்குத் தேவையான மேம்பாடுகளுக்காக அரசாங்கம் கிட்டத்தட்ட $102 மில்லியன் செலவு செய்துள்ளதாகக் கழகம் தெரிவித்தது.

