இன்று முதல் ஆஸ்திரேலியாவுக்கு வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் செல்லலாம்

இன்று முதல் ஆஸ்திரேலியாவுக்கு வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் செல்லலாம்

2 mins read

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை

கார­ண­மாக கடந்த இரண்டு ஆண்டு­க­ளா­கத் தனது எல்­லை­களை மூடி­வைத்­தி­ருந்த ஆஸ்­தி­ரே­லியா, இன்று முதல் வெளிநாட்டுச் சுற்­றுப்பய­ணி­களை மீண்­டும் வர­வேற்­கிறது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் எண்­ணிக்கை அதி­க­மாக இருப்­ப­தா­லும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை குறைந்­தி­ருப்­ப­தா­லும் அந்நாட்டு அர­சாங்­கம் இந்த முடிவை எடுத்­துள்­ளது.

"எல்­லை­க­ளைத் திறப்­ப­தற்­கான காத்­தி­ருப்பு முடி­வுக்கு வந்­து­

விட்­டது," என்று மெல்­பர்ன் அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் ஆஸ்­தி­ரே­லி­யப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் தெரி­வித்­தார்.

அறவே கொவிட்-19 கிரு­மித்­தொற்று இல்­லாத சூழலை உருவாக்க ஆஸ்திரேலியா முதலில் திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த அணு­கு­மு­றை­யி­லி­ருந்து மாறி கொவிட்-19 கிரு­மி­யு­டன் வாழும் நிலையை ஆஸ்­தி­ரே­லியா ஏற்­றுக்­கொண்­டுள்­ளதை இந்த எல்­லைத் திறப்பு காட்­டு­வதை சுகாதார நிபுணர்கள் சுட்டினர்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் மிகக் கடு­மை­யான உடல்­ந­ல பாதிப்பு, மர­ணங்­கள் ஆகி­ய­வற்­றைக் குறைக்க தடுப்­பூசி போடும் திட்­டத்­துக்கு அந்­நாடு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கிறது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இது­வரை 2.7 மில்­லி­யன் பேர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்

பட்­டுள்­ள­னர்.

அவர்­களில் பெரும்­பா­லா­

னோ­ருக்­குக் கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் ஓமிக்­ரான் கிருமி வகை தலை­தூக்­கி­யதை அடுத்து

கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

ஆனால் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் விகி­தம் அதி­கம் உள்ள நாடு­களில்

ஆஸ்­தி­ரே­லி­யா­வும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

16 வய­துக்­கும் மேற்­பட்­டோ­ரில் 94 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் அதி­க­மா­னோர் இரு­முறை தடுப்­பூசி

போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

வளர்ச்சி அடைந்த மற்ற பல நாடு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில்

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் கொவிட்-19 மர­ண எண்­ணிக்கை குறைவு.

கிரு­மித்­தொற்­றால் இது­வரை ஆஸ்­தி­ரே­லி­யா­வில் 5,000க்கும் குறை­வான உயிரிழப்புகள் ஏற்­

பட்­டுள்­ளன.

நேற்­றைய நில­வ­ரப்­படி

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் அதிக மக்­கள்­தொகை கொண்ட நியூ சவுத் வேல்ஸ், விக்­டோ­ரியா, குவீன்ஸ்­லாந்து ஆகிய மாநி­லங்­களில் மேலும் 16,600க்கும் அதி­க­மா­னோ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

கிருமித்தொற்று காரணமாக குறைந்­தது 33 பேர் நேற்று மாண்­ட­னர்.

ஆஸ்­திரே­லியா அதன் எல்­லை­

க­ளைத் திறந்­து­விட்­டுள்­ள­போ­தி­லும் மற்ற நாடு­க­ளி­லி­ருந்து பய­ணி­கள் அங்கு செல்­வார்­களா என்­ப­தைப் பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்­டும் என்று சுற்­றுப்­ப­யண நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

சுற்­று­லாத் துறையை மீண்­டும் உயிர்ப்­பிக்க ஆஸ்­தி­ரே­லியா முயற்சி களை மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு நவம்­பர் மாதத்­தி­லி­ருந்து ஆஸ்­தி­ரே­லியா அதன் எல்­லை­க­ளைப் படிப்­ப­டி­யா­கத் திறந்துவந்­துள்­ளது.

முத­லில் ஆஸ்­தி­ரே­லி­யா­வி­

லி­ருந்து வேறு நாடு­க­ளுக்­குச் செல்­ல­வும் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு வர­வும் ஆஸ்திரேலியர்களுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது.

அதன் பிறகு, வெளி­நாட்டு மாண­வர்­க­ளுக்­கும் சில ஊழி­யர்­

க­ளுக்­கும் அனு­மதி வழங்­கப்­பட்­டது.

இன்று முதல் சுற்­றுப்­ப­ய­ணி­களும் வர்த்­த­கப் பய­ணி­களும் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குச் செல்­ல­லாம்.